
இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது,
ஹில்லாரி கிளிண்டன் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ளார். அவர் இருநாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு, உறவு குறித்து பேசவிருக்கிறார். இந்த பயணத்திற்கு அவர் தயார் ஆனவுடன் பாகிஸ்தான் கிளம்புவார். தற்போது நாங்கள் அவரின் பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.
ஹில்லாரி பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, பிரதமர் யூசுப் ராசா கிலானி மற்றும் இராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானியிடம் பேசினார். சிறப்பு பிரதிநிதி மார்க் கிராஸ்மேன் விரைவில் பாகிஸ்தான் சென்று ஆலோசனை நடத்தவிருக்கிறார். அவர் இந்த வாரம் பாகிஸ்தான் புறப்படுகிறார்.
ஒசாமா இருப்பிடம் குறித்து எங்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து அந்நாட்டிடம் சில கேள்விகள் கேட்கவிருக்கிறோம். மேலும், இரு நாட்டு உறவுகளைத் தொடர்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது என்றார்.
ஆனால் ஹில்லாரி பாகிஸ்தான் செல்லும் தேதிகள் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
No comments
Post a Comment