கிளிநொச்சி செல்வாநகர்ப் பகுதியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தமது பிள்ளைகளைப் பார்த்திருக்குமாறு பக்கத்து வீட்டில் ஒப்படைத்துவிட்டுச் சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம் வெளியில் போவதாகவும், அதுவரையில் தமது இரு பிள்ளைகளையும் கவனித்துக்கொள்ளுமாறு பக்கத்து வீட்டாரிடம் கூறிச் சென்ற தாய், இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட நேரம் சென்றும் இந்தப் பெண் வீடு திரும்பாத காரணத்தினால் பக்கத்து வீட்டுக்காரர் விடயத்தை பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பிரிவிடம் இரு பிள்ளைகளையும் பொலிஸார் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து இந்த இரு பிள்ளைகளும் நீதிமன்றத்தினால் பாரமெடுக்கப்பட்டு அவர்கள் சிறுவர் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த இரு பிள்ளைகளில் மூத்த பிள்ளை 5 வயதுடைய ஆண் என்றும், மற்றைய பிள்ளை 3 வயதுடைய பெண் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 'என்னைச் சிறுவர் இல்லத்துக்கு அனுப்பாதேயுங்கோ. எப்படியும் என்ர அம்மா எங்க நின்றாலும் நான் கூட்டிக்கொண்டு வருவேன்' என்று கெஞ்சினான் அந்த 5 வயதுச் சிறுவன்.
இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலக சிறுவர் நன்னடை வெளிக்கள உத்தியோகத்தர் தெரிவிக்கையில், 'பெற்றோர் இல்லாத பிள்ளைகள் சட்டப்படி சிறுவர் இல்லங்களுக்கே அனுப்ப வேண்டும். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது' என்றார்.

No comments
Post a Comment