குடும்பப் பராமரிப்பில் ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் முதலிடம் வகிக்கிறது என பாரிசை மையமாக கொண்ட பொருளாதாரம் மற்றும் கலாச்சார மேம்பாட்டு அமைப்பான ஓ.இ.சி.டி ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் உள்ளவர்கள் குடும்பம் மற்றும் வேலை ஆகிய இரண்டு விடயங்களுக்கும் உரிய நேரத்தை செலவிடுகின்றனர். பணிக்கு செல்பவர்கள் குடும்பத்தின் மீதும் தனிக்கவனம் செலுத்துவதால் ஐரோப்பிய ஒன்றியத்தில் மகப்பேறில் பிரான்ஸ் சராசரிக்கு அதிகமாக உள்ளது.
பிரான்சில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2.1 சதவீத குழந்தைகள் உள்ளனர். ஆனால் போர்ச்சுகல் நாட்டில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 1.3 சதவீத குழந்தை மட்டுமே உள்ளது. பிரான்சில் குழந்தைப் பாதுகாப்புக்கு அரசு உரிய சலுகைகள் அளிக்கின்றன. இதனால் பெண்கள் குடும்பத்தில் நட்பு ரீதியில் பணிகளை அணுக முடிகிறது.
ஐரோப்பிய நாடுகளில் அதிகம் பெண்கள் பணிக்கு செல்லும் நாடாகவும் பிரான்ஸ் திகழ்கிறது. இங்கு 25-54 வயதுக்குட்பட்ட 80 சதவீதப் பெண்கள் பணிக்கு செல்கிறார்கள். ஆனால் இதர ஐரோப்பிய நாடுகளில் 71 சதவீதப் பெண்கள் மட்டுமே வேலைக்கு செல்கிறார்கள்.
பிரான்சில் 2 குழந்தைகள் உள்ள பெற்றோர் பணியை விட்டு விலகிச் செல்லலாம் அல்லது பணி நேரத்தை குறைத்துக் கொள்ளலாம். குழந்தை பிறப்புக்கு பின்னர் குழந்தை நலனுக்கான பலன்களை 3 ஆண்டுகள் வரை பெறலாம்.
பிரான்சில் குழந்தை பாதுகாப்பு மையங்களில் நியாயமான கட்டணங்கள் 3 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பெறப்படுகிறது. பிரான்சில் 2008ஆம் ஆண்டில் 42 சதவீதக் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பதிவு ஆகியுள்ளன.
குழந்தைப் பராமரிப்பில் தாய், தந்தை இருவரும் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். இதனால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்கின்றன.

No comments
Post a Comment