Latest News

May 09, 2011

லேடனைக் கொன்ற வீரர்களுக்கு ஒபாமா பாராட்டு _
by admin - 0

அல் காய்தா தலைவர் பின் லேடனைக் சுட்டுக்கொன்ற அமெரிக்க கமாண்டோ வீரர்களை ஜனாதிபதி பராக் ஒபாமா நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

இந்நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதியால் வழங்கப்படும் மிக உயரிய பாராட்டுப் பத்திரத்தையும் ஒபாமா வீரர்களுக்கு வழங்கினார். 

';மிகச் சிறப்பாக உங்கள் பணியைச் செய்து முடித்தீர்கள், அமெரிக்க மக்கள் சார்பாகவும் உலக சமுதாயத்தின் சார்பாகவும் உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள்" என்று லேடனைக் கொன்ற படையினரைப் பார்த்துக் கூறினார் ஒபாமா தனது கருத்தை தெரவித்தார். 

ஆப்கானிஸ்தானில் பணியாற்றிவிட்டுத் திரும்பிய அமெரிக்க வீரர்களையும் பின் லேடனைக் கொன்ற வீரர்களையும் அந்த நிகழ்ச்சியில் சந்தித்த ஒபாமா அமெரிக்க வீரர்களின் ஈடு இணையற்ற தியாகம், வீரம், அர்ப்பணிப்பு உணர்வு காரணமாக இது சாத்தியமாயிற்று என்றார். இதேவேளை அல் காய்தா மட்டும் அல்லது தலிபான்களையும் ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் முல்லா உமர் என்ற தலிபான் தலைவர் பின் லேடனுக்கு நெருக்கமாக இருந்தார், இனி என்ன ஆகும் என்று பார்க்க வேண்டும் என்றார்.
« PREV
NEXT »

No comments