Latest News

May 09, 2011

டயலொக் 4ஜி – நீண்ட கால புரட்சிகரமான பரீட்சார்த்த வலையமைப்பாய் கொழும்பில் நேரடியாய்
by admin - 0

கொழும்பு நகரில், நீண்ட கால புரட்சிகரமான டயலொக்கின் பரீட்சார்த்த வலையமைப்பை தெற்காசியாவிலேயே முதன்முதலாய் நிறுவிய டயலொக்.

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநரான, டயலொக் ஆசிஆட்டா, 4வது பரம்பரை நீண்ட கால புரட்சிகரமான பரீட்சார்த்த வலையமைப்பினை கொழும்பு நகரில் நிறுவியது. இந்த பரீட்சார்த்த வலையமைப்பானது நகரின் முக்கிய சில இடங்களை சுற்றி வளைப்பதுடன் தெற்காசிய வலயத்திலேயே இதனை முதன்முதலில் அமுல்படுத்தும் பெருமையையும் பெற்றுக்கொள்கின்றது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பொதுப் பணிப்பாளரான திரு. அநுஷ பெல்பிட்ட இந்த பரீட்சார்த்த வலையமைப்பினை நேரடியாய் இருந்து நிறைவேற்றி வைத்ததுடன், உள்ளிடத்தில் மொபைல் பாவனையின்போது இணையத் தரவு வேகமானது 100 ஆடிpளஐ விஞ்சுவதையும் நகருக்குள் வெளியிடத்தில் பாவனையின்போது மொபைல் பாவனையின்போது இணைய தரவு வேகமானது 4050 Mbps ஐ அடையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

இந்த பரீட்சார்த்த வலையமைப்பை செயற்படுத்தும் வேளையின் போது இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பொதுப் பணிப்பாளரான திரு. அநுஷ பெல்பிட்ட கருத்து தெரிவிக்கையில், தொழில்நுட்ப அறிமுகங்களின் ஒவ்வொரு தருணங்களின்போதும் வலயத்துக்குள்ளேயே இலங்கை தொடர்ச்சியாய் முன் நிற்கின்றது. மொபைல் மற்றும் புரோட்பேண்ட் சேவைகளை இலங்கைப் பாவனையாளர்களுக்கு கிடைக்கக்கூடிய வகையில் வழங்குவதில் இலங்கையின் மொபைல் துறையானது சாதனைகளை கண்டுவருவதை தெரியப்படுத்துவதில் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பெருமையடைகின்றது.

இதனால் குரல் மற்றும் தரவுபாவனையானது 80% வளர்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நீண்டகால புரட்சிகரமான வலையமைப்பின் பரீட்சார்த்த செயற்பாட்டினை ஒழுங்குசெய்யும் டயலொக்கின் முனைப்பின் ஊடாய் - இலங்கைச் சந்தைக்கு அடுத்த பரம்பரைக்கான புரோட்பேண்ட் வலையமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் தரமான புரோட்பேண்ட் சேவைகளை வழங்கும் அரசாங்கத்தின் குறிக்கோளை அடைய இந்த முனைப்பு நிச்சயம் வழிவகுக்கும்" எனக் குறிப்பிட்டார்.

இந்த 4ஜி பரீட்சார்த்த வலையமைப்பை பற்றி கலாநிதி. ஹான்ஸ் விஜயசூரிய கருத்து தெரிவிக்கையில், இந்த நீண்டகால புரட்சிகரமான வலையமைப்பின் பரீட்சார்த்த சேவையை கொழும்பு நகரில் நடாத்துவதை முன்னிட்டு டயலொக் பெருமையடைகின்றது. தொழில்நுட்பத்தின் காலச்சக்கரமானது ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பிற்கும் இணங்க குறைவடைந்துகொண்டே செல்கின்றது.

அந்தவகையில் எமது வலையமைப்பு உட்கட்டமைப்பினை அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டமைத்து எமது வாடிக்கையாளர்களுக்கு உலகளவில் அபிவிருத்தியடைந்துள்ள சந்தைகளுக்கு ஒத்த வலைமைப்புத்தரத்தினை பெற்றுக்கொடுப்பதில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளோம். இந்த பரீட்சார்த்த வலையமைப்பின் கற்றல்களுக்கு இணங்க இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ளோருக்கு, நீண்டகால புரட்சிகரமான தொழில்நுட்பத்தின் நன்மைகளாய் 4வது பரம்பரையின் புரோட்பேண்ட் சேவைகளை பெற்றுக்கொடுப்பதில் டயலொக் ஈடுபட்டுள்ளது" என்றார்
« PREV
NEXT »

No comments