
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. |
நடிகர் ரஜினிகாந்திற்கு சாதாரண வைரஸ் காய்ச்சல் தான் என்றும், ரசிகர்கள் கவலை அடைந்து மருத்துவமனைக்கு வரவேண்டாம் என்றும் அவரது மகள் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று இரவு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், காலில் வீக்கம் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், ரஜினியின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலையடைய வேண்டாம் என அவரது மகள் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். இது குறித்து ஐஸ்வர்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது அனைவருக்கும் சாதாரணமாக வரும் வைரஸ் காய்ச்சல்தான் அவருக்கும் வந்துள்ளது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலை அடையத் தேவை இல்லை. |
No comments
Post a Comment