Latest News

May 05, 2011

வானம் திரை விமர்சனம்
by admin - 0

அன்பே சிவம் என்பதை உணர்த்து அதை யோசித்து ஐந்து கதைகளை ஒரே திரைக்கதையின் மூலம் திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் க்ரிஷ்.
தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற வேதம் படத்தின் ரீமேக் தான் இந்த 'வானம்'.
ஏழையாக பிறந்தாலும் எப்படியாவது பணக்கரானாக ஆகிவிட வேண்டும் எனபதற்காக பணக்கார வீட்டு பெண்னை காதலிக்கும் சிம்பு, இசைத் துறையில் சாதனை செய்ய வேண்டும் என்பதை லட்சியமாக கொண்ட பரத், பட்ட கடனுக்காக கூலி வேளை செய்யும் தனது மகனை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தனது கிட்னியை விற்கும் சரண்யா பொன்வன்னன், பாலியல் தொழிலாக இருந்தாலும், அதை சொந்தமாக செய்ய வேண்டும் என்று நினைக்கும் அனுஷ்கா, பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட பாதிப்பால் வீட்டை விட்டு ஓடிப்போகும் தம்பியை தேடி அலையும் இஸ்லாமியரான பிரகாஷ்ராஜ் என வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் இந்த ஐந்து கதாபாத்திரங்களும் காலத்தின் சூழ்நிலையில் ஒரு இடத்தில் சந்திக்க நேரிடுகிறது. அப்படி அவர்கள் சந்திக்கும் சூழ்நிலை என்ன, அங்கு நடந்தது என்ன என்பதுதான் படத்தின் முடிவு.
ஐந்து வெவ்வேறு கதைகளை ஒரே திரைக்கதையில் சுவாரஸ்யமாக பயணிக்க வைப்பது சாதாரண விஷயமில்லை. இதை இயக்குநர் க்ரிஷ், படத்தின் முதல் பாதியில் செய்ய தவறியிருந்தாலும், இரண்டாம் பாதியில் சரியாகவே செய்திருக்கிறார்.
ஐந்து கதைகளும் ஒவ்வொரு விதத்தில் உணர்வு பூர்வமான விஷயங்களை சொன்னாலும், தனது மகனின் படிப்பிற்காக கிட்னியை விற்கும் தாயின் கதை மற்றும், தீவிரவாதிகள் உருவாவதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்பதையும், அதே சமயத்தில் இஸ்லாமியர்களின் மீது உள்ள தவறான பார்வையையும் விளக்கிய கதை மனதில் அழுத்தமாக பதிகின்றது.கொமெடி, காதல், சோகம் என அனைத்து இடத்திலும் அபாரமாக தேர்வு பெற்றிருக்கிறார் சிம்பு.
இப்படிப்பட்ட வேடத்தில் நடித்தற்காக சிம்புவை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும், அதே சமயத்தில் இதுபோன்ற கதையம்சம் கொண்ட படத்தில் கூட தலை புராணம், பஞ்ச் டயலாக் என மாஸ் ஹீரோ மோகத்திற்குள் செல்வது கதாபாத்திரத்திற்கு பின்னடைவை ஏற்படுகிறது. கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்குள் கச்சிதமாக பொருந்தியிருக்கும் பரத், அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் அவருடைய கதாபாத்திரத்தின் பாதிப்பு பெரிதாக இல்லை. கவர்ச்சியில் காட்டியிருக்கும் தாரளத்தை நடிப்பில் காட்டவில்லை அனுஷ்கா.
மகனுக்காக கிட்னியை விற்கும் தாயாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணனும், அவருடைய மாமாவாக நடித்திருக்கும் அந்த பெரியவரும் அளவான நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ் வேடத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், சில இடங்களில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்திருக்கிறார். படத்தின் முதல் பாதியில் ஏற்படும் சலிப்பை தனது கொமெடி மூலம் சரி செய்திருக்கிறார் சந்தானம்.
யுவனின் இசையில் எவண்டி உன்ன பெத்தான் என்ற பாடல் ஆட்டம் போடவைக்கிறது, மற்ற பாடல்கள் சுமார் ரகம்தான். படத்தில் இடம்பெறும் ஐந்து கதையமைப்பும் சுவாரஸ்யம் என்றாலும், அதில் குறிப்பிட்ட கதாபாத்திரங்களின் நீலமான மற்றும் அதிகமான காட்சியமைப்புகளின் மூலம் படத்தின் முதல் பாதி படம் பார்ப்பவர்களை சற்று வெருமையடைய வைத்தாலும், இரண்டாம் பாதியில் ரசிகர்களை அமைதியாக்கி புகழாரம் வாங்குகிறார் இயக்குநர்.
« PREV
NEXT »

No comments