Latest News

March 14, 2018

தலை சிறந்த அறிவியலாளரை இழந்தது உலகம்
by admin - 0

தலைசிறந்த அறிவியலாளர் என போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும்,வானியல் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை காலமானார்.அவருக்கு வயது 76.



1942ஆம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி ஆக்ஸ்போர்டில் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தார்.கோட்பாட்டு இயற்பியலாளர், எழுத்தாளர் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் என பன்முக ஆளுமை கொண்டவர் இவர். இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும் அதீத ஈடுபாடு உடையவர். அண்டவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்பு ஆகியன இவரது முக்கிய ஆய்வுத்துறைகள். 

தனது இளம்வயதிலேயே நரம்பியக்க நோயினால் பாதிக்கப்பட்டு, கை கால் இயக்கம் மற்றும் பேச்சு பாதிப்புகளுக்கு உள்ளானார். பல அறிவியல் குறிப்புகள் உட்பட உலகம் முழுவதும் விற்பனையில் சிறந்து விளங்கிய புத்தகங்களை எழுதியுள்ளார். அனைவரும் அறிவியலை அறிந்துகொள்ளும் விதத்தில் எளிய நடையில் அமைந்திருப்பது இவரது எழுத்துகளின் தனிச்சிறப்பு.



ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்வும் பணியும் என்ற புத்தகம் தமிழக வாசகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. நீண்ட காலமாக உடல் நலம் குன்றி இருந்த ஹாக்கிங், பிரிட்டனில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். மூன்று பிள்ளைகளும் சேர்ந்து அவரது இறப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டனர். 

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் குவாண்டம் அறிவியல், அணுக்கரு அறிவியல் துறைகளில் பல முக்கிய ஆய்வுகள் செய்து இருக்கிறார்.

இந்த நூற்றாண்டின் அதி புத்திசாலிகளில் மிக முக்கியமானவர் ஹாக்கிங். சர்க்கர நாற்காலியில்இருந்தபடியே பல சாதனைகளை படைத்தவர் ஹாக்கிங்.

வாழ்க்கை மாறியது

இவருக்கு 21 வயது இருக்கும் போது மோட்டார் நியூரான் நரம்பியல் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இவரது கழுத்திற்கு கீழே உள்ள பகுதி முழுக்க வேலை செய்யாமல் போனது. மொத்தமாக வீல் சேரில் முடங்கினார் ஹாக்கிங். அவரது ஆயுள் காலம் சில காலமே என்று டாக்டர்கள் கூறி விட்டனர். ஆனால் அதை ஹாக்கிங் முறியடித்தார்.



உதவி

நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் இவர் சாதனைகளில் இறங்கினார். இவரது கண் அசைவுகளை வைத்து என்ன பேசுகிறார் என்று கண்டுபிடிக்க சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு அதுவே அவரது குரலாக மாறியது. அதன்பின் நடந்தது வரலாறு, அறிவியல் சரித்திரம். இவர் செய்த ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம் இப்படித்தான் வெளியானது.

ஏலியன்கள் வருவார்கள்

இவர் ஏலியன்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டு இருந்தார். கண்டிப்பாக இந்த பிரபஞ்சத்தில் எங்காவது ஒரு இடத்தில் வேற்றுகிரக உயிர்கள் வாழும் என்று குறிப்பிட்டு இருந்தார். அவர்கள் நம்மை சந்திப்பார்களா என்பது மட்டும் சந்தேகம் என்று குறிப்பிட்டு இருந்தார்.



கால பயணம்

டைம் டிராவலுக்கு சரியான விளக்கம் கொடுத்தவர் இவர்தான். எதிர்காலத்தில் ஒளியை விட வேகமாக மக்கள் பயணம் செய்வார்கள் அப்போது டைம் டிராவல் சாத்தியம் என்று குறிப்பிட்டார்.

மிகவும் சிறந்தவர்

இவரது ஆராய்ச்சிகள், கருத்துக்களை பார்த்த உலக விஞ்ஞானிகள் இவரை சுற்றி சுற்றி வந்தார்கள். இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலாளர் ஹாக்கிங் என்பதில் சந்தேகமே இல்லை.
« PREV
NEXT »

No comments