Latest News

December 31, 2017

மாற்­றத்தை ஏற்­ப­டுத்த தவ­றி­னால் தமிழ் தேசி­யம் கன­வா­கப் போய்­வி­டும் – சட்டத்தரணி சுகாஸ்
by admin - 0

வடக்கு மாகாண முத­ல­வர் எங்­க­ளு­டன் இணைந்து பய­ணிப்­பதை நாம் விரும்­பு­கின்­றோம். அதற்­கான கத­வு­கள் எப்­போ­தும் திறந்­தி­ருக்­கும். எமது கட்­சி­யில் ஒட்­டுக்­கு­ழுக்­கள், விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதிரானவர்கள் ஆகி­யோரை தவிர்ந்த அனை­வ­ரும் இணைந்து கொள்ள முடி­யும்.


இவ்­வாறு தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யைச் சேர்ந்த சட்டத்தரணி சுகாஸ் தெரி­வித்­தார்.

தமிழ்த் தேசிய மக்­கள் பேர­வை­யின் வேட்­பா­ளர்­கள் அறி­முக நிகழ்வு வட்­டுக்­கோட்­டை­யி­லுள்ள பேர­வை­யின் அலு­வ­ல­கத்­தில் நேற்று மாலை நடை­பெற்­றது. அதில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:-


எமது கட்­சி­யில் வேட்­பா­ளர்­க­ளாக கள­மி­றங்­கி­யுள்ள அனை­வ­ரும் தேசியத்தை மதிப்­ப­வர்­கள், ஊழ­லற்­ற­வர்­கள். நாங்­கள் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து 2010 ஆம் ஆண்டு பிரிந்­த­மைக்கு முக்­கிய காரணம் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்பு தனது கொள்­கை­யி­லி­ருந்து முழுமை­யாக வில­கிச் சென்­ற­மையே. நாம் அப்­போது பிரிந்து சென்­றது சரி­யான முடி­வு­தான் எனச் சில கட்­சி­கள் தற்­போது உணர்­கின்­ற­னர்.

தற்­போ­தைய அர­சி­யல் சூழ்­நி­லை­யில் தமிழ் மக்­கள் கூட்­ட­மைப்­பின் பாதை தொடர்­பில் விழிப்­ப­டை­யாது விட்­டால் பின்­னர் எந்­தக் காலத்திலும் மக்­களை காப்­பற்ற முடி­யாத நிலைமை ஏற்­ப­டும். தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு நிக­ராக நாம் பய­ணிக்க வேண்­டிய தேவை உள்­ளது. நாம் சில பொது அமைப்­புக்­களை எம்­மு­டன் இணைத்து தமிழ் தேசி­யப் பேரவை என்ற உரு­வாக்­கத்­து­டன் பய­ணிக்­கின்­றோம்.

நாம் தமிழ் மக்­க­ளி­டை­யில் இந்த உள்­ளு­ராட்சி தேர்­த­லில் இருந்து மாற்­றத்தை எதிர்­பார்க்­கின்­றோம். நாம் அபி­வி­ருத்­திப் பணி­க­ளில் பின்னிற்­க­மட்­டோம். தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் மக்­க­ளி­டை­யில் ஒற்­றை­யாட்­சியை சமஸ்டி என்று கூறி திணிக்க முனை­கின்­ற­னர்.


தமிழ் தேசி­யத்­துக்கு ஈ.பி.டி.பி கட்­சி­யி­னர் எந்­த­ள­வுக்கு விரோதமானவர்­களோ மக்­க­ளுக்கு எத்­த­கைய கொடு­மை­களை செய்தார்­களோ அதே செயல்­களை தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் அங்கம் வகிக்­கும் புளொட் அமைப்­பும் மேற்­கொண்­டது. இந்த தேர்­த­லில் இருந்து தமிழ் மக்­கள் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த தவ­றி­னால் தமிழ் தேசி­யம் கன­வா­கப் போய்­வி­டும். நாம் வழி தவறி சென்­றால் மக்­க­ளா­கிய நீங்­கள் எங்­களை தூக்கி எறி­யுங்­கள்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தேசி­யப் பாதை­யில் பய­ணிக்­கின்­றார். அவர் அங்­கம் வகிக்­கும் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்பு தடம் மாறி செல்­கின்­றது என அண்­மை­யி­லும் கூட சுட்டிக்காட்டியிருந்தார். அவர் தமிழ் மக்­கள பேர­வை­யின் கொள்கைகளை மதிக்­கின்­றேன் என்று கூறி­யுள்­ளார். நாமும் தமிழ் மக்கள் பேர­வை­யின் கொள்­கையை மதிக்­கின்­றோம். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை எம்­மு­டன் இணைந்து செயற்­பட வேண்­டும் என்று மீண்­டும் அழைக்­கின்­றோம் என அவர் அங்கு மேலும் தனது கருத்தை முன்வைத்தார்.

« PREV
NEXT »

No comments