தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 25.12.2017 திங்கட்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
பிற்பகல் 05.30 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் திருவுருவப் படத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர் மாலை அணிவித்தார். நினைவுச் சுடரினை நல்லூர்த் தொகுதி வேட்பாளர் வாசுகி சுதாகர் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மலரஞ்சலியும் நினைவுரைகளும் இடம்பெற்றன.
No comments
Post a Comment