Latest News

January 03, 2018

அரசியல் பிரவேசத்தை சொல்லி ஆசி பெற்றேன்... கருணாநிதி சந்திப்புக்குப் பின் ரஜினி பேட்டி!
by admin - 0

ரஜினி
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்ததோடு, தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அவரிடம் தெரிவித்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். இதனையடுத்து புத்தாண்டன்று அரசியல் மாற்றம் விரும்புபவர்கள் பதிவு செய்வதற்காக இணையதளம் மற்றும் செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.

தான் அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்த பிறகு, நேற்று ஊடகத்தினரை சந்தித்து ரஜினி பேசினார். அரசியல் அறிவிப்புக்குப் பிறகு ரஜினி படு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் அவர் சென்னை ராமகிருஷ்ணா மடத்திற்கு சென்று சுவாமி கவுதமானந்தாவை சந்தித்தார். ரஜினியின் இந்த சந்திப்பு ஆன்மிக அரசியல் என்பதை ஒட்டியே இருப்பதாக பார்க்கப்பட்டது


அரசியலுக்கு வரும் முடிவை எடுத்த பிறகு அரசியல் ஆலோசகர்களை தன்னுடைய போயஸ் கார்டன் வீட்டிற்கு அழைத்து கலந்துரையாடி வந்தார் ரஜினி. இந்நிலையில் இன்று முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததார். அவருடைய முதல் அரசியல் கட்சி தலைவரின் சந்திப்பு இது.



சென்னை கோபாலபுரம் வந்த ரஜினிகாந்த் சுமார் 20 நிமிடங்கள் கருணாநிதியை சந்தித்தார். அவருடன் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் உடன் இருந்தார் இந்த சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன். அவருடைய உடல்நலனை கேட்டறிந்தேன், என்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அவரிடம் கூறி ஆசி பெற்றோன் என்றார். முன்னதாக போயஸ் கார்டனில் இருந்து கோபாலபுரம் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது, திமுக தலைவர் கருணாநிதி என்னுடைய நண்பர். எனவே மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்கிறேன், அவருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கப் போகிறேன் என்றார்.

மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை, அது பற்றி பின்னர் பார்க்கலாம் என்றும் ரஜினி கூறியுள்ளார். அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினி அறிவித்த நிலையில் முதன்முறையாக திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


« PREV
NEXT »

No comments