Latest News

January 09, 2017

மேஜர் அன்பரசன்… மண் காத்த மாவீரன் !! அவரது 10ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்
by admin - 0

மேஜர் அன்பரசன்… மண் காத்த மாவீரன் !! 
அவரது 10ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
-------------------------------------------------------
 
இவர் 1980 ஆம் ஆண்டு யூலை மாதம் 6 ஆம் தேதி யாழ்மாவட்டம் வல்வெட்டிதுறையில் பிறந்தார்.

1994 ஆம் ஆண்டு அதாவது சரியாக தனது பதினான்காம் அகவையில் தனது அன்னையின் கரங்களால் தமிழன்னையின் மண் காக்க தேசியத் தலைவரின் கைகளில் கையளிக்கப்பட்டு, இயக்கத்தால் இளந்திரையன் என்று பெயர் சூட்டப்பட்டு இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளபட்டார். பின்னாளில் இவரது உழைப்புக்கும் அன்புக்கும் நெகிழ்ந்த முக்கிய தளபதி ஒருவரால் அன்பரசன் என்றழைக்கப்பட்டார்.
 
தாய்மண்ணின் விடுதலைக்காகவே அன்றுமுதல் இயங்க ஆரம்பித்தார். இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் ஆரம்ப காலகட்டங்களில் சிறுத்தைப் படையணியில் செயல்பட்டார். சிறப்பான பயிற்சிகளின் மூலம் தன்னை சிறந்த போராளியாக உருவாக்கிக் கொண்டார்.

■ முதலாவது தாக்குதல்

முதலாவது தாக்குதல் 1996 ஆம் ஆண்டு “ஓயாத அலைகள்” வெற்றித் தாக்குதல் நடவடிக்கையின் போது முல்லைத்தீவு, அளம்பில் பகுதியில் இலங்கை இராணுவத்தின் தரையிறக்கத் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த சிறுத்தைப் படையணியில் இவரும் ஒருவர்.

இந்தத் தாக்குதலின் போது வலது கையில் பலமான காயமடைந்தார் பின்னர் சில காலம் களமருத்துவனாகச் செயல்பட்டார்.
 
அதன் பின்னர் உந்துருளி படையணியிலும் பின்னர் இம்ரான் பாண்டியன் படையணியிலும் செயலாற்றினார். இக்காலகட்டங்களில் இவரின் சிறப்பான செயல்பாடுகளை கவனத்த தலைமை இவரை வேவுப்புலியாக நியமித்தது. ஆனையிறவு வெற்றி தாக்குதலுக்கு வேவுப்புலிகளின் துல்லியமான நடவடிக்கைகளே மிகமுக்கிய காரணம்.

அந்த வேவுப்புலிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.
 
2001-2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிளாலி பகுதியில் வேவு நடவடிக்கைக்குச் சென்ற வேளை இவருடன் சென்ற ஒரு போராளி இராணுவத் தாக்குதலுக்கு உள்ளாகி வீரமரணம் அடைய அவரின் உடலை இராணுவம் கைப்பற்றி விடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக அந்த போராளியின் உடலைச் சுமந்து நீந்தி புலிகளின் கட்டுப்பாட்டுக் கரை ஒதுங்கி மயங்கி சாய்ந்தார். இச்சம்பவத்தை தேசியத் தலைவர் அவர்கள் பாராட்டி பரிசில் வழங்கினார் என்பதும் இவரது வாழ்வில் குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும்…

இவரது திறமான இச்செயற்பாடுகளால் கரும்புலியாக தன்னை இணைத்துக் கொண்டார்.

அக்காலகட்டங்களில் பல தாக்குதல் வெற்றிகரமாக நிகழ்த்தபட்டது. அதில் 2006 ஆம் ஆண்டு நடந்த கெப்பிற்கோலோ பேரூந்து கிளைமோர் தாக்குதல் குறிப்பிடதக்க வெற்றியாகும்.

இவர் மொத்தமாக இயக்கத்தின் 37 தாக்குதல்களில் பங்கு கொண்டுள்ளார்…

இதில், இவர் பதினெட்டு முறை போர்களின் போது காயம் பட்டார்.

2007 ஆம் ஆண்டு உள்ளகத் தாக்குதல் நடவடிக்கைக்கு சென்று விட்டு திரும்பி வரும் வழியில் இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் *08.01.2007அன்று) வீரமரணம் அடைந்து இராணுவம் இவரின் உடலை எடுத்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக ஒப்படைத்ததனால் உடனடியாக கரும்புலி என அறிவிக்க முடியவில்லை. காரணம், அவ்வாறு கரும்புலி என அறிவித்தால் அது இராணுவத்திற்கு பதவி உயர்வு உருவாகக் காரணமாகி விடும் என்பதனால் மேஜர் அன்பரசன் என்று அறிவிக்கபட்டு விடுதலைபுலிகளால் இவரது உடலம் பெற்றுக்கொள்ளபட்டு பின்னாளில் கரும்புலி என அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.
 
-தமிழகத்தியன் அரி


« PREV
NEXT »

No comments