Latest News

December 04, 2016

தமிழக முதல்வரின் நிலை கவலைக்கிடம் -விரைந்தார் ஆளுனர்
by admin - 0

 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாலையில் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை விரைகிறார்.


சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

ஜெயலலிதா உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று மாலையில் ஜெயலலிதாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அவர உடல் நிலையை இதயவியல், நுரையீலர் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் அப்போலோ வளாகம் பரபரப்படைந்தது. இந்த நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னைக்கு விரைந்துள்ளார். இரவு 11 மணிக்குள் சென்னைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா உடல்நிலை குறித்து தகவல் வெளியாகி உள்ளதால் அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை வாசல் முன்பு குவிந்து வருகின்றனர். கோவில்களில் பிரார்த்தனைகள் தீவிரமடைந்துள்ளன.

« PREV
NEXT »

No comments