
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் இதயத்தை செயற்கையாக தூண்டுவித்து செயல்பட முயற்சிகள் நடப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.முதல்வர் ஜெயலலிதாவுக்கு extracorporeal membrane heart assist device மூலமாக சிகிச்சை தொடர்வதாக அப்பல்லோ தெரிவித்துள்ளது. அதாவது இதயமும், நுரையீரலும் செயல்பட முடியாத நிலைக்குப் போகும்போது செயற்கையாக தூண்டுவித்து செயல்பட வைக்கும் முயற்சியே இது. கிட்டத்தட்ட பேஸ்மேக்கர் போல.
இந்த இதயத்தைத் தூண்டுவிக்கும் சாதனம் மூலமாக முதல்வரின் இதயத்தை செயல்பட வைக்க முயற்சிகள் நடப்பதாக கூறியுள்ளது அதிமுகவினரின் கவலைகளை அதிகரிப்பதாக உள்ளது.
லண்டன் டாக்டர் பியலின் ஆலோசனைப்படி இந்த முயற்சிகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
No comments
Post a Comment