அப்பல்லோவில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென பரபரப்பு ஏற்பட்டது. உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் அப்பல்லோவில் குவிந்தனர். செய்தி நிறுவனங்களின் புகைப்படக்காரர்கள், நிருபர்கள் அப்பல்லோவில் குவிந்தனர்.

ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, அவர் நடக்க ஆரம்பித்துள்ளார். இன்று போயஸ் கார்டன் திரும்புவார் என்று ஒரு பக்கம் செய்தி வெளியானது. இன்னொரு பக்கம் அவர் உடல்நிலை சரியில்லை என்று செய்தி வெளியானது. அவரது இதயத் துடிப்பில் கவனம் செலுத்துகிறார்கள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
நாம் விசாரித்ததில் அப்பல்லோ டாக்டர்கள் ஜெயலலிதா செயற்கை சுவாத்தில் இருந்து இயற்கை சுவாசத்திற்கு 90 சதவீதம் வந்துவிட்டார். அப்படி அவர் இயற்கையாக சுவாசித்துக் கொண்டிருக்கும்போதே திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. செயற்கை சுவாச கருவிகளோடு கூடிய சிசியு வார்டு பகுதியில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருப்பதால் டாக்டர்கள் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அந்த மூச்சுத் திணறலை சரிசெய்துவிட்டார்கள். இந்த தகவலை கேள்விப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், அப்பல்லோவிற்கு விரைந்துள்ளார்கள். இதனால் செய்தி நிறுவனங்களின் புகைப்படக்காரர்களும், நிருபர்களும் அப்பல்லோவில் குவிந்தார்கள் என்கிறது அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள்.
No comments
Post a Comment