Latest News

October 01, 2016

பாடசாலை மாணவர்களிற்கான அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை
by admin - 0


 
வடமாகான பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் சண்டிலிப்பாய் கலாசார பிரிவின் ஒழுங்குபடுத்தலில் சன்டிலிப்பாய் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட   பாடசாலை மாணவர்களிற்கான அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறையானது இன்று வியாழக்கிழமை 29ம் திகதி  வியாழக்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் ஆரம்பமாகியது. இப்பயிற்ச்சிபட்டறையானது நேற்று 30 திகதி நடைபெற்றது எதிர்வரும்  3ம் திகதி   திங்கட்கிழமை  காலை 8.30 மணிமுதல் 12.30 மணி வரை சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
 
இப்பயிற்சி பட்டறையின் வளவாளர்களாக  நாடக கலைஞரும் வலிகாமம் கல்வி வலயத்தின் ஆரம்ப பிள்ளைபருவ அபிவிருத்தி உதவிக்கல்விப்பணிப்பாளர் ச.கிருபானந்தன், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நாடகத்துறை ஆசிரியரும் புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளருமான எஸ்.ரி.குமரன், தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரியின் நாடக ஆசிரிரும் ஆரோகான அரங்க கல்லூரியின் இயக்குநருமான அ. அயூரன் , மானிப்பாய் இந்துக்கல்லூரியின் நாடகத்துறை ஆசிரியரும் புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாக பணிப்பாளருமான எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்ச்சிகளினை வழங்குகின்றார்கள்..

இப்பயிற்சி பட்டறையில் தலைமைத்துவம், கற்பனையாக்கம், எண்ணக்கருவிருத்தியாக்கம், நடிப்பு, நெறியாழ்கை , இசைநாடகம்-கூத்து  தொடர்பான   பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இப்பயிற்சி பட்டறையில்  மானிப்பாய் மகளீர்கல்லூரி, மானிப்பாய் இந்துக்கல்லூரி, சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி, பண்டத்தரிப்பு மகளீர் கல்லூரி, இளவாலை புனிதகென்றியரசர் கல்லூரி , இளவாலை கன்னியர் மடம் மாகவித்தியாலயம், நவாலி மகாவித்தியாலயம், மெமோறியள் ஆங்கில பாடசாலை,  போன்ற  பாடசாலை  மாணவர்கள்  ம் கலந்துகொள்கின்றார்கள். பயி;ச்சிபட்டறையின் நிறைவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக  என பிரதேச செயலளர்  அறிவித்துள்ளார் 
 

 

 


 
« PREV
NEXT »

No comments