Latest News

October 01, 2016

ஜெயலலிதா மூளைச்சாவு 48 மணிநேரத்தின் பின்னர்தான் சொல்லமுடியும் - வட்ஸ்அப் தகவலால் பரபரப்பு
by admin - 0


ஜெயலலிதா கோமா நிலையில் உள்ளதாக இளம் பெண் ஒருவர் கூறியிருக்கும் வாட்ஸ் ஆப் ஓடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்நிலையில் பிரான்ஸை சேர்ந்த தமிழச்சி என்பவர் ஜெயலலிதா மர்மான முறையில் இறந்துவிட்டதாக கூறி அவருடைய பேஸ்புக் பக்கத்தில் கருத்தினை பதிவெற்றம் செய்தார். இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதற்கு எல்லாம் முற்று புள்ளி வைக்கும் வகையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து மருத்துவர்களை சந்தித்து விபரங்கள் தெரிந்து கொண்டார். அதன் பின் ஆளுநர் அறிக்கையில் ஜெயலலிதாவை அவருடைய வார்டில் சென்று பார்த்தேன். அவர் நலமாக உள்ளார் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளமான வாட்ஸ் ஆப்பில் இளம்பெண் ஒருவர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அடுத்த 48 மணி நேரம் கடந்த பின்னர் தான் சொல்ல முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஜெயலலிதா குறித்து கூறியுள்ள வாட்ஸ் ஆப் ஓடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
« PREV
NEXT »

No comments