Latest News

June 05, 2016

மூடிக்கிடக்கும் தொழிற்­சா­லை­களை தொழிற்­ப­யிற்சி பேட்­­டை­களாக மாற்றியமைப்ப­தற்­கு நட­வ­டிக்­கை
by admin - 0

ஊவா மாகா­ணத்­தி­லுள்ள தோட்­டங்­களில் மூட்­டிக்­கி­டக்கும் தொழிற்­சா­லைகளை திறந்து இளைஞர், யுவ­தி­க­ளுக்கு தொழில் பயற்சிகளை வழங்கும் பேட்­டை­களாக மாற்றி அமைக்க நட­வ­டிக்கை மேற்­கொண்டு வரு­வ­தாக பெருந்­தோட்ட தொழி­லாளர் காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ளரும் பதுளை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வடிவேல் சுரேஷ் தெரி­வித்தார்.
நேற்று பண்­டா­ர­வளை ஹோட்­டலில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றில் பசறை, லுணு­கலை போன்ற பிர­தே­சங்­களில் வறுமைக் கோட்­டிற்குள் வாழும் மக்­க­ளுக்கு சீமெந்து மற்றும் தகரம் போன்ற வளங்­களை பெற்றுக் கொடுப்­பது தொடர்­பான கருத்துப் பரி­மா­ற­லி­லேயே மேற்­படி தக­வலைத் தெரி­வித்தார்.

தொடர்ந்து அங்கு கருத்துத் தெரி­விக்­கையில்;

ஊவா மாகா­ணத்தைப் பொறுத்­த­வ­ரையில் சுமார் ஐம்­ப­துக்கு மேற்­பட்ட தேயிலைத் தொழிற்­சா­லைகள் மூடிய நிலையில் காணப்­ப­டு­கின்­றன. இவை கடந்த கால ஆட்­சி­யா­ளர்­களால் கவ­னிக்­கப்­ப­டாது கைவி­டப்­பட்ட நிலையில் ஒரு சில தொழிற்­சா­லைகள் உள்ள அதே வேளை ஒரு சில தொழிற்­சா­லைகள் கடந்த கால வன்­செயல் கார­ண­மாக உடைந்த நிலை­யிலும் எரிந்த நிலை­யிலும் காணப்­ப­டு­கின்­ற­ன.

இவை­களை தொழி­ல­மைச்சு கை ய­கப்­ப­டுத்தி அந்­தந்த தோட்­டத்தைச் சேர்ந்த வேலை­யற்ற இளைஞர் யுவ­தி­களை தெரிவு செய்து தொழிற் பயிற்­சி­களை வழங்கி அதே தொழிற்­சா­லை­களில் ஆடை, ஆப­ர­ணங்கள், கைப்­பணி பொருட்கள் போன்ற தொழிற் பேட்­டைகள் உரு­வாக்­கு­வதன் மூலம் வேலை­வாய்ப்பை பெற்றுக் கொடுக்க முடியும். இதனால் இங்­கி­ருந்து கொழும்­பிற்கோ அல்­லது புற­ந­க­ருக்கு வேலைத் தேடிச் செல்லும் நிலை­மையை முற்­றாக மாற்­றி­ய­மைக்க முடியும் எனவும் தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர், இவ் விடயம் தொடர்­பாக பிர­தமர், தொழில் அமைச்சர், பெருந்­தோட்ட அமைச்சு மற்றும் இளைஞர் விவகார தொழிற் பயிற்சி அமைச்சு அதிகார சபைகளுடன் தொடர்பு கொண்டு விரைவில் ஆராயவிருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments