ரஜினிகாந்த் நடிப்பில் ஜூலை முதல் வாரம் வெளியாகவிருக்கும் கபாலி படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் 12-ம் தேதி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கம் அல்லது YMHCA வளாகம், குறைந்தபட்சம் சத்யம் திரையரங்கில் நடக்கும் என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது.
ஆனால் அதற்கெல்லாம் மாறான ஒரு முடிவை எடுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. எந்த நிகழ்ச்சியும் நடத்தாமல், அமைதியாக ஆன்லைனிலேயே கபாலி பாடல்களை வெளியிட்டு விடலாம் என்பதே அது.
கபாலியின் டீசர் வெளியீடும் எந்த நிகழ்ச்சியும் இல்லாமல் அமைதியாக யுட்யூபில் வெளியாகி உலக சாதனைப் படைத்தது. அதே போல இசை வெளியீட்டையும் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
கபாலி டீசர் வெளியீடு மாதிரியே காலை 10 மணிக்கு இசை வெளியீட்டையும் நடத்திவிடத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில் ட்விட்டரில் கபாலி இசை வெளியீடு குறித்த #KabaliAudioFromJune12 ஹேஷ்டேக் இப்போதே பிரபலம் ஆகி வருகிறது.
No comments
Post a Comment