Latest News

June 12, 2016

இராணுவப் பின்னடைவா?
by admin - 0

கொழும்பு நக­ருக்குக் கிழக்கே கிட்­டத்­தட்ட 35 கி.மீ. தொலைவில் இருந்த, கொஸ்­கம, சாலாவ ஆகிய இடங்கள் இப்­போது உல­க­ளவில் அறி­யப்­பட்ட இடங்­க­ளாக மாறி­யி­ருக்­கின்­றன. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 5.45 மணி­ய­ளவில் சாலாவ இரா­ணுவ உப ஆயு­தக்­க­ளஞ்­சி­யத்தில் ஏற்­பட்ட பாரிய வெடி­வி­பத்துத் தான் அதற்குக் காரணம்.

கொஸ்­க­மவை அடுத்த சாலாவ இரா­ணுவ முகாமில் ஏற்­பட்ட வெடி­வி­பத்து, இலங்­கையின் வர­லாற்றில் நிகழ்ந்த மோச­மான வெடி­வி­பத்­தாக அமைந்­தி­ருக்­கி­றது.

மூன்று தசாப்த காலப் போரைச் சந்­தித்த இலங்­கையில், பல்­வேறு ஆயுதக் கிடங்­கு­களில் வெடி­வி­பத்­துக்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. பல்­வேறு ஆயுதக் களஞ்­சி­யங்கள் புலி­களின் தாக்­கு­தலில் அழிந்து போயி­ருக்­கின்­றன.

இன்னும் பல்­வேறு பாரிய குண்­டு­வெ­டிப்­பு­க் களும் நிகழ்ந்­தி­ருக்­கின்­றன. அவை எல்­லா­வற்­றையும் தூக்கித் தின்று விடும் அள­வுக்கு இந்த வெடி­வி­பத்து மோச­மா­ன­தாக அமைந்­தி­ருக்­கி­றது.

மாலையில் தொடங்­கிய வெடிப்­புகள் மறுநாள் நண்­பகல் வரை தொடர்ந்­தது. வெடித்துச் சித­றிய ஆயுதக் கிடங்கின் மையப்­ப­கு­திக்குப் பல ­நாட்கள் செல்ல முடி­யா­த­ள­வுக்கு அதன் தாக்கம் மிக அதி­க­மாக இருந்­தது.

இந்த ஆயுதக் கிடங்கில் அதி­க­ளவில் கன­ரக ஆயு­தங்­க­ளுக்­கான குண்­டுகள் தான் சேமிக்­கப்­பட்­டி­ருந்­தன. அதனால் இழப்­பு­களும் அதி­க­மா­கவே ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. ஆட்­டி­ல­றி­க­ளுக்­கான குண்­டு­களும், பல்­குழல் பீரங்­கி­க­ளுக்­காக குண்­டு­க­ளுமே அதி­க­ளவில் இங்கு சேமித்து வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

தீ விபத்­தினால் இவை ஒவ்­வொன்­றாக வெடித்தும், எரிந்தும் அழிந்து போயி­ருக்­கின்­றன. இதனால், பெரு­ம­ள­வி­லான குண்­டுகள், வெடித்துச் சித­றா­ம­லேயே, தூக்கி வீசப்­பட்­டி­ருக்­கின்­றன. அவற்­றுக்குள் இருந்த வெடி­ம­ருந்­துகள் தீய்ந்து- கருகிப் போயி­ருக்­கின்­றன.

ஆட்­டி­லறி, மோட்டார் குண்­டு­களை வெடிக்க வைப்­ப­தற்­காக பியூஸ்கள் இறுதி நேரத்தில் தான் பொருத்­தப்­படும். பாது­காப்புக் கருதி, ஆயுதக் கிடங்­கு­களில் அவை பொருத்­தப்­ப­டாமல் தான் வைக்­கப்­பட்­டி­ருக்கும்.

ஆட்­டி­லறி மோட்டார் குண்­டு­களைப் பயன்­ப­டுத்தும் போதே அவற்றை வெடிக்க வைக்கும் ஊக்­கி­யான பியூஸ்­களை பொருத்­து­வது வழக்கம். அவ்­வாறு பியூஸ்­களைப் பொருத்­தாத விடத்து, குண்­டு­களில் உள்ள வெடி­ம­ருந்­துகள் எல்­லாமே வெடிக்கும் என்று எதிர்­பார்க்க முடி­யாது. தீயினால் கரு­கியும், தீய்ந்தும் போய்­விடும்.

பொது­வாக தீ ஏற்­படும் போது வெடி­ம­ருந்­துகள் வெடித்துச் சித­றாது. வெடி­ம­ருந்தை வெடிக்க வைக்க வேண்­டு­மானால், அதற்கு டெட்­ர­னேற்றர் என்ற ஊக்கி அவ­சியம். அது­போலத் தான், ஆட்­டி­லறி மோட்டார் குண்­டு­களின் முனையில் இந்த பியூஸ்கள் பொருத்­தப்­படும். சாலாவ ஆயுதக் கிடங்கில் இருந்த பெரு­ம­ளவு குண்­டுகள் வெடிக்­காத நிலையில், அதற்குள் இருந்த வெடி­ம­ருந்­துகள் தான் சீறிப் பறந்­தி­ருக்­கின்­றன. அதனால் தான், இந்தக் குண்­டுகள் சில கி.மீ தூரத்­துக்குள் சென்று வீழ்ந்­தி­ருக்­கின்­றன.

இந்த ஆயுதக் கிடங்கில் இருந்த குண்­டு­களின் அளவு பரி­மா­ணங்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில், இவை அனைத்தும் ஒரே நேரத்தில் வெடித்துச் சித­றி­யி­ருக்­கு­மானால், அது பெரும் அழிவை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும். நினைத்துப் பார்க்க முடி­யா­த­ள­வுக்கு விளை­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும்.


குண்­டு­களில் இருந்த வெடி­ம­ருந்­துகள் சீறி, கருகிப் போனதால் தான் தீயும், புகையும் அதி­க­மாக இருந்­தது. பெரி­ய­ளவில் வெடி­பொ­ருட்கள் சேமிக்­கப்­பட்­டி­ருந்­தாலும், இங்­கி­ருந்த ஆட்­டி­லறி, மோட்டார்க் குண்­டுகள், மிகவும் பெரி­யவை என்­ப­தாலும், சேதங்கள் அதி­க­ளவில் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன.

போர்க்­கா­லத்தில் இங்கு கிட்­டத்­தட்ட 25 ஆயிரம் தொன் வெடி­பொ­ருட்கள் சேமித்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக, முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார்.
எனினும், இங்­கி­ருந்த மத்­திய ஆயுத தள­பாடக் களஞ்­சியம், 2011ஆம் ஆண்டு வியாங்­கொ­டைக்கு மாற்­றப்­பட்­ட­தாலும், ஒரு பகுதி வெடி­பொ­ருட்கள் மாது­று­ஓயா, அம்­பே­புஸ்ஸ இரா­ணுவ முகாம்­க­ளுக்கு மாற்­றப்­பட்­ட­தாலும், பெரி­ய­ள­வி­லான அழி­வு­களில் இருந்து சலாவ பிர­தேசம் தப்­பி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.
போர்க்­கா­லத்தில், 25 ஆயிரம் தொன் வெடி­பொ­ருட்கள் களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த சூழலில் இப்­ப­டி­யொரு அனர்த்தம் ஏற்­பட்­டி­ருந்தால், போரின் போக்கே மாறி­யி­ருக்­கலாம்.
எவ்­வா­றா­யினும், அண்­மைய வெடி­வி­பத்தின் போது, 9 ஆயிரம் தொன் வெடி­பொ­ருட்கள் அங்­கி­ருந்­த­தாக தக­வல்கள் கூறு­கின்­றன. எனினும், சம்­பவம் நடந்த போது எவ்­வ­ளவு வெடி­பொ­ருட்கள் இருந்­தன, இதனால் ஏற்­பட்ட இழப்­பு­களின் பெறு­மதி என்ன என்ற விப­ரங்கள் எதை­யுமே இரா­ணு­வமோ அர­சாங்­கமோ அதி­கா­ர­பூர்­வ­மாக வெளி­யி­ட­வில்லை.

தற்­போது நடத்­தப்­படும் விசா­ர­ணை­களின் முடிவில் தான் எல்­லாமே தெரி­ய­வரும் என்­கி­றது அர­சாங்கம்.

விபத்­துக்­கான கார­ணத்தை மட்­டு­மன்றி, விபத்து நடந்த போது எவ்­வ­ளவு வெடி­பொ­ருட்கள் இருந்­தன, அதன் பெறு­மதி என்ன என்­பதைக் கூட ஒரு விசா­ரணைக் குழு தான் கண்­ட­றிய வேண்டும் என்­பது விந்­தை­யான விடயம்.
ஒரு ஆயுதக் கிடங்கின் கையி­ருப்பு, அவற்றின் பெறு­மதி என்­பன தொடர்­பான தக­வல்கள் இரா­ணுவத் தலை­மை­ய­கத்தில் அல்­லது, இரா­ணு­வத்தின் விநி­யோகப் பிரி­விடம் ஒரு­போதும் இல்­லாமல் போகாது.

அர­சாங்­கமும் இரா­ணு­வமும், அழிந்­து­போன வெடி­பொ­ருட்­களின் அளவு மற்றும் பெறு­ம­தியை இது­வரை வெளி­யி­டாமல் இருப்­ப­தற்கு, அவற்றைக் கணிக்க முடி­யா­தது தான் காரணம் என்று நம்ப முடி­யா­தி­ருக்­கி­றது.

சில தக­வல்கள், ஆயிரம் கோடி ரூபா பெறு­ம­தி­யான வெடி­பொ­ருட்கள் அங்கு சேமிக்­கப்­பட்­டி­ருந்­தாக கூறி­யி­ருந்­தாலும், அது சரி­யான கணிப்பா என்ற தெரி­ய­வில்லை.
எனினும், வெடி­பொ­ருட்­க­ளுக்கு ஏற்­பட்ட அழி­வுகள், ஏனைய தனியார் மற்றும் அரச சொத்­துக்­க­ளுக்கு ஏற்­பட்ட அழ­வுகள் அவற்றைத் திருத்­தி­ய­மைப்­ப­தற்­கான செல­வுகள் என்­ப­ன­வற்­றையும் சேர்த்தால், அது ஆயிரம் கோடி ரூபாவைத் தொடு­வ­தாக இருக்கக் கூடும்.

2001இல், கட்­டு­நா­யக்க விமா­னப்­படைத் தளம் மீதான கொமாண்டோத் தாக்­கு­தலில் புலி­களால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பேர­ழி­வுக்குப் பின்னர், ஒரே சம்­ப­வத்தில் அர­ச­ப­டை­க­ளுக்கு இந்­த­ளவு அழி­வுகள் ஏற்­பட்­டது இதுவே முறை.

1997 இல், ஆனை­யி­றவில் இருந்த பெரி­ய­தொரு வெடி­பொருள் களஞ்­சியம், அதற்குப் பின்னர், ஜெய­சிக்­குறு நட­வ­டிக்­கைக்­காக, தாண்­டிக்­கு­ளத்­திலும், ஓமந்­தை­யிலும், அமைக்­கப்­பட்ட வெடி­பொருள் களஞ்­சி­யங்கள், 1999 நவம்­பரில், கன­க­ரா­யன்­கு­ளத்தில் ஒரு பாரிய ஆயுதக் கிடங்கு என்­பன புலி­களால் அழிக்­கப்­பட்­டன.
போர் முடி­வுக்கு வந்த பின்னர், 2009 ஜூனில் வவு­னி­யாவில் 211 ஆவது பிரிகேட் தலை­மை­ய­கத்தில் இருந்த வெடி­பொருள் களஞ்­சி­யமும் வெடித்துச் சித­றி­யது. இவை­யெல்­லா­வற்­றிலும் ஏற்­பட்ட இழப்­பு­களை விட சலா­வவில் ஏற்­பட்ட இழப்பு பாரி­யது.
ஏனென்றால், சலா­வவில் இருந்­தது பிர­தான ஆயுத விநி­யோக மையம். அங்­கி­ருந்தே போரிக்­கா­லத்தில் எல்லாப் பகு­தி­க­ளுக்கும் விநி­யோ­கங்கள் இடம்­பெற்­றன.
ஆனால், புலி­களால் அழிக்­கப்­பட்­டவை எல்­லாமே, முன்­ன­ரங்க ஆயுத விநி­யோக மையங்கள் மட்டும் தான். அங்கு ஒரு கள­மு­னைக்­கான வெடி­பொ­ருட்கள் தான் சேமிக்­கப்­பட்­டி­ருந்­தன.

வெடி­வி­பத்து நிகழ்ந்த சலாவ இரா­ணுவ முகாமில் தான் தொண்டர் படை­களின் தலை­மை­ய­கமும் இருந்­தது, அங்­கி­ருந்த தொண்டர் படை­யினர் 70 ஆயிரம் பேரின் தனிப்­பட்ட கோவை­களும் அழிந்து போயி­ருக்­கின்­றன.
இரா­ணு­வத்தின் ஒரு கட்­ட­மைப்பே குலைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இது ஒரு பெரிய பின்­ன­டைவு என்­பதில் சந்­தே­க­மில்லை.

ஆனால், இதனை ஒரு, இரா­ணுவத் தோல்­வி­யாக- பாது­காப்பு அச்­சு­றுத்­த­லாக- இரா­ணு­வத்தின் பல­வீ­ன­மாக காட்­டு­வ­தற்கு அர­சியல் ரீதி­யான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போர் நடந்து கொண்­டி­ருந்த காலத்தில் இந்த இழப்­புகள் ஏற்­பட்­டி­ருந்தால், அதன் தாக்கம் மிக அதி­க­மா­கவே இருந்­தி­ருக்கும்.
போரில்­லாத சூழலில், இந்த ஆயு­தங்கள், ஒரு தற்­காப்­புக்­காகத் தான் – முன்­னெச்­ச­ரிக்­கை­யாகத் தான் சேக­ரித்து வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இப்­போது இவற்றை இரா­ணு­வத்­தி­னரால் எதற்கும் பயன்­ப­டுத்த முடி­யாது.

இந்த ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான களம் இப்­போது காலா­வ­தி­யாகி விட்­டது. அப்­ப­டி­யான நிலையில், இந்த வெடி­பொ­ருட்கள் இருந்­தாலும் ஒன்று தான் இழக்­கப்­பட்­டாலும் ஒன்று தான்.

அந்­த­வ­கையில் இந்த வெடி­வி­பத்து இரா­ணு­வத்தின் பலத்தை குறைத்து விட்­ட­தாக கருத முடி­யாது. இரா­ணு­வத்தின் பலம் என்­பது இவ்­வ­ளவு ஆயு­தங்­களை சேக­ரித்து வைத்­தி­ருப்­பதை மட்டும் அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தல்ல. பொருத்­த­மில்­லாத ஆயு­தங்­களை வைத்­தி­ருப்­பதால் மட்டும், வலிமை பெற்ற இரா­ணு­வ­மாக இருக்க முடி­யாது.

கடல் எல்­லை­களைக் கொண்­டி­ராத ஒரு நாடு, ஆயிரம் நீர்­மூழ்­கி­களை வைத்­தி­ருந்­தாலும் பய­னில்லை. அது போலத் தான், இதுவும்.

இலங்கைப் படை­யி­னரைப் பொறுத்­த­வ­ரையில், ஆட்­டி­ல­றி­களும், பல்­குழல் பீரங்­கி­களும் இப்­போது தேவை­யற்ற பய­னற்ற உலோ­கங்கள் தான். ஒரு நாட்டின் படைபலம் என்ற வகையில் இவை இருக்கின்றனவே தவிர, இவற்றை வைத்து, சண்டையிட முடியாது.

இலங்கையின் ஒரு பிரதேசத்தை வேறொருவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மட்டுமே இவற்றைப் பயன்படுத்தலாம். அதற்கான சூழல் இப்போது இல்லை.

எனவே தான் இந்த வெடிபொருட்களின் இழப்பையிட்டு இராணுவம் கவலைப்படப் போவதில்லை. ஆனால் பொருளாதார ரீதியாக ஏற்பட்ட இழப்பை சாதாரணமாக எடைபோட முடியாது.

அதேவேளை, ஆட்டிலறிகளும், பல்குழல் பீரங்கிகளும் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களை எந்தளவுக்கு பாதித்திருக்கும் என்பதை சிங்கள மக்களுக்கு அனுபவபூர்வமாக உணர வைத்திருக்கிறது இந்த வெடிவிபத்து.
அதுபோலவே, பொதுமக்கள் மத்தியில் உள்ள இராணுவ முகாம்களின் ஆபத்தை சிங்கள மக்களும் உணரும் நிலையையும் இது ஏற்படுத்தியிருக்கிறது.

வடக்கிலுள்ள மக்கள் தம் மத்தியில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று ஏன் கோருகின்றனர் என்பதை சிங்கள மக்களும் உணர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைந்திருக்கிறது

நன்றி வீரகேசரி 
« PREV
NEXT »

No comments