Latest News

June 12, 2016

லண்டனில் இருந்து வந்த ரேனுகரூபனுக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த கொடூரம்
by admin - 0

யாழ்ப்பாணம் வரணியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் பிருத்தானியாவில் குடியுரிமை கொண்டவருமான வேலாயுதபிள்ளை ரேணுகரூபன் என்பவர் பிருத்தானியாவில் இருந்து தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் உள்ள  வரணிக்குச்  சென்ற வேளை கொடிகாமம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு  கடும் சித்திரவதைகள் காயங்களிற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

தற்போது யாழ்சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரேணுகரூபனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நிரந்தரமாக தடுத்துவைப்பதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக குடும்பத்தினரிற்கு தகவல்கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1981 ம்ஆண்டு பிறந்தரேணுகரூபன் யுத்த காலத்தில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி லண்டனில் அரசியல்தஞ்சம் கோரியவராவார்.  இவர் அங்கு நிரந்தர வதிவிட அனுமதி பெற்று வசித்து வந்தார். அத்துடன் தனது கையில் புலிச் சின்னத்தை பச்சை குத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது சகோதரி வேலாயுதபிள்ளை லலிதாரூபி முன்னர் புலிகளின் குரல் வானொலியின்செய்தி வாசித்தவர்,2006 மற்றும் 2010 இலங்கை படையினரால் சித்திரவதைசெய்யப்பட்ட பின்னர் அவர் பிரிட்டனில் தஞ்சம் புகுந்துள்ளார்.

மே 31 ம் திகதி வேலாயுதபிள்ளை ரேணுகரூபன் தனது வயதான பெற்றோரை பார்ப்பதற்காகவும், திருமணம் செய்வதற்காகவும் இலங்கைக்கு சென்றுள்ளார்.அவர் யூன் மாதம் முதலாம் திகதி மதியம்; 12.45 ற்கு கொழும்பு விமானநிலையத்தை சென்றடைந்துள்ளார்.கொழும்பு விமானநிலையத்தில் அவர் குறித்த விபரங்களை பெற்றுக்கொண்ட பின்னர் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரை சாவகச்சேரி வரணியில் உள்ள குடமியன் என்ற இடத்திற்கு செல்வதற்கு அனுமதித்துள்ளனர்.

ரேணுகரூபன் தனது வீடுவந்து சேர்ந்த அன்றைய தினமே சீருடை அணியாத இரு அதிகாரிகள் அதிகாலையில் மோட்டார் சைக்களில்அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

ரேனுக ரூபன் கடந்த வருட இறுதியில் யாழ்ப்பாணம் வந்த போது வரணிப் பகுதியில் நடந்த கோஸ்டி மோதல் ஒன்றில் ஈடுபட்டார் எனவும் இது தொடர்பாக குற்றவாளியாக பொலிசாரால் இனங்காணப்பட்ட போது அவர் லண்டனுக்கு சென்று விட்டதாகவும் அந் நேரம் பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் ரூபனின் வீட்டிற்கு கொடிகாமம் பொலிஸ் நிலையத்திலிருந்து வாகனமொன்று வந்துள்ளது, அதில் இருந்து இறங்கிய பொலிஸார் ரூபனின் கைகளை கட்டி இழுத்துச்சென்றுள்ளனர்.அவர் கைதுசெய்யப்பட்டது குறித்த ஆவணங்கள் எதனையும் அவர்கள் வழங்கவில்லை,குடும்பத்தவர்களுடன் தொடர்புகொள்வதற்கு அனுமதிக்காமல் அவரை தடுத்துவைத்திருக்கின்றனர்.

பிரிட்டிஸ் தூதரகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி வாக்குமூலம் பெறுவதற்கான முயற்சி

இதன் பின்னர் 3 ம் திகதி ரேணுகரூபனின் வீட்டிற்கு சென்ற சீருடைஅணியாத இரு அதிகாரிகள் தங்களை பிரிட்டிஸ் தூதரகத்தினை சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவர்களில் ஓருவர் தன்னை நியுயான் எனவும் மற்றைய நபர் தன்னை நிசான் எனவும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.தனிப்பட்ட தகவல்களை குறித்துக்கொண்ட பின்னர் அவர்கள்ரேணுகரூபனிற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான தனிப்பட்ட தொடர்புகள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர்.குடும்பத்தினர் அது குறித்து பதில் அளிக்கதயங்கியுள்ளனர், அதனை தொடர்ந்து அவர்கள் லண்டனில் உள்ள ரூபனின் சகோதரிக்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து கேள்விஎழுப்பியுள்ளனர்.



அவர்கள் பிரிட்டிஸ் தூதரக அதிகாரிகள் இல்லை என்பதை ஓரு கட்டத்தில் உணர்ந்துகொண்ட ரேணுகரூபனின் குடும்பத்தவர்கள் அவர்களின் கேள்விகளிற்கு பதில் அளிக்க மறுத்துள்ளனர்.இதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர் கோஸ்டி மோதல் குற்றச்சாட்டுகளுடன் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார். இதே வேளை பொலிஸார் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் தலைமறைவாகியுள்ளார் எனவும் ரேணுகரூபனின் பெயரை பொலிசார் வேண்டுமென்று இதில் சேர்த்துள்ளனர் எனவும் ரேணுகரூபன் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர் 17 ம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டவேளை சித்திரவதையும் துஸ்பிரயோகமும்

ரேணுகரூபன் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவர் கடும் சித்திரவதைகளிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்,அதனால் அவர் கடும்காயங்களிற்கு உள்ளாகியுள்ளார்,பாதிக்கப்பட்டவரிடமிருந்து கிடைத்த தகவலின் படி அவருக்கு விடுதலைப்புலிகளுடன் உள்ள தொடர்புகள் காரணமாகவே அவர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது,அவர் கைதுசெய்யப்பட்டது குறித்து சர்வதேச அமைப்புகளிடம் தகவல் வழங்கியதற்காகவும் அவர் தாக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக அவரிற்கு முகத்திலும் கைகாலிலும் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. கடும் சித்திரவதைகள் காரணமாக அவர் 7 ம்திகதி யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரைச் சித்திரவதை செய்யுமாறு கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யாழ் சிறைச்சாலையில் உள்ள சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவருக்கு  கூறிய பின்னரே குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ரேணுகரூபனைச் சித்திரவதை செய்ததாக  ரேணுகரூபன் தரப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொடிகாமம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு ரேணுகரூபன் மீது தனிப்பட்ட பகை இருந்தமையே இதற்கு காரணம் எனவும் தெரியவருகின்றது.

யாழ் போதனா வைத்தியசாலையில் ரேணுகரூபன் அனுமதிக்கப்பட்ட போது அங்கு சென்ற சட்டத்தரணிகள் காயங்களுடன் இருந்த அவரைப் புகைப்படம் எடுத்திருந்தனர். அந்தப் புகைப்படங்கள் இங்கு தரப்பட்டுள்ளன





« PREV
NEXT »

No comments