Latest News

June 12, 2016

புத்தாக்க அரங்க இயக்க கலைஞர்களின் நடிப்பில் தெருவெளி ஆற்றுகை
by admin - 0

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு செயற்ப்பாடாக வேல்விஷன் நிறுவனத்தின் அனுசரனையில் வலிமேற்கு பிரதேசசபையின் ஒழுங்குபடுத்தலில் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வட்டுக்கோட்டை சுழிபுரம் அராலி சங்கானை  ஆகிய பகுதிகளில் புத்தாக்க அரங்க இயக்க கலைஞர்களின் நடிப்பில்  தெருவெளி ஆற்றுகைகள்  நிகழ்த்தப்பட்டது. 

புத்தாக்க அரங்க இயக்கத்தின் இயக்குநர்களாகிய எஸ்.ரி.குமரன் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரின் நெறியாள்கையில்  இடம்பெற்ற 'உயிர்ப்பு '  தெருவெளி ஆற்றுகை நிகழ்வானது  06.06.2016 திங்கட்கிழமை சுழிபுரம் கிழக்கு காட்டுப்புலம் , வழக்கம்பராய் ஆல மரத்தடி 07.06.2016 செவ்வாய்க்கிழமை மூளாய் பிள்ளையார் கோவிலடி ,    பொன்னாலை கண்ணன் சனசமூக நிலைய முன்றல் , 08.06.2016 புதன்கிழமை  வட்டுத்தெற்கு அடைக்கலம் தோட்டம் கந்தசுவாமி கோவில் ,  வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி சந்தி  ,  09.06.2016 வியாழக்கிழமை சங்கானை பஸ்தரிப்பு நிலையம் சங்கானை உப அலுவலக முன்னறல் 10.06.2016 வெள்ளிக்கிழமை அராலி தெற்க்கு ஆலடி சந்தி  ,அராலி உப அலுவலக முன்றல் ஆகிய  பத்து இடங்களில் ஆற்றுகை செய்யப்பட்டது. இவ் தெருவெளி ஆற்றகைக்கு மக்கள் பெரும் உற்சாகம் அளித்ததுடன் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சுற்றுச்சூழல் வழிப்புணர்வு தொடர்பான  செய்திகள் தெருவெளி   ஆற்றுகை  ஊடாக வழங்கப்பட்டது...
« PREV
NEXT »

No comments