Latest News

May 06, 2016

வவுனியா ஜோசப் இராணுவ முகாமுக்குள் நுழைந்தார் ஐ.நா அதிகாரி
by admin - 0

சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் நேற்றுமுன்தினம் வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் சோதனைகளை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னிப் படைகளின் தலைமையகமாக இயங்கும், ஜோசப் படை முகாமில், இரகசியமாக பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அது ஒரு சித்திரவதை முகாமாக இயங்குவதாகவும், குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

சிறிலங்கா இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்ட பலர், ஜோசப் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக, ஐ.நா நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த யஸ்மின் சூகாவும் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தநிலையிலேயே, சிறிலங்கா வந்துள்ள, சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடூரமான மனிதநேயமற்ற முறையில் நடத்தப்படுதல் மற்றும் தண்டிக்கப்படுதல் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர், ஜுவான் மென்டஸ், நேற்றுமுன்தினம் ஜோசப் இராணுவ முகாமில் சோதனைகளை மேற்கொண்டுள்ளார்.

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளரான ஜுவான் மென்டஸ் கடந்த 29ஆம் நாள் தொடக்கம் சிறிலங்காவில் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments