தனியார் செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் தேர்தல் கருத்துக்கணிப்புகளில் முக்கிய தலைவர்கள் பலர் கடும் போட்டியை சந்திக்கும் சூழல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது..
இந்த கருத்துகணிப்புகள் ஈழத்தில் படுகொலைக்கு காரணமாகவும் அதற்கு துணையாகவும் இருந்த தி.மு.கவுக்கான வெற்றிவாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளன.
இந்த கருத்து கணிப்புக்கள் உண்மையெனில் அதன்படியே தி.மு.க வெற்றி பெறுமாயின் தமிழக மக்களின் மனநிலையை கண்டு உலக தமிழினம் வெட்கப்படும் வேதனைப்படும். தன் இனத்தை அழித்த அதற்கு துணைபோன தலைவர்களை ஒரு இனம் ஆதரிக்கும் எனில் அவர்களின் மனநிலை எப்படிப்பட்டது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.
கருத்து கணிப்புகள் அப்படியே நடந்துவிடுவதில்லை சில கருத்துகணிப்புகள் பணத்துக்காக செய்யப்படுகின்றன பண முதலைகள் சில ஊடகங்களை இப்படியான கருத்துகணிப்புக்களை நடத்த பணத்தை வாரி இறைப்பதும் சில பணத்தாசை பிடித்த ஊடகங்கள் இதை பயன்படுத்துவதும் இயல்பானவை ஆகவே இப்படியான உண்மைத்தன்மை அற்ற கருத்து கணிப்புக்கள் மக்களின் மனங்களை மாறபோவது இல்லை .
தமிழக மக்கள் தங்களின் தலைவர்களை தங்களின் இனத்திலிருந்தே தேர்ந்தெடுப்பார்கள் என்பதே உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு
No comments
Post a Comment