Latest News

May 03, 2016

ஒரே இடத்திலுள்ள மாகாணப் பாடசாலைகளுக்கு வெப்பம் அதிகம் தேசிய பாடசாலைகளுக்கு வெப்பம் இல்லை.
by admin - 0

ஒரே பிரதேசத்தில் உள்ள மாகாணப் பாடசாலைகளுக்கு வெப்பம் அதிகம் ஆனால் தேசிய பாடசாலைகளுக்கு வெப்பம் இல்லை இப்படியாகத்தான் இலங்கையில் மாணவர்கள் நோக்கப்படுகின்றார்கள்.

தற்போது இலங்கையில் கடும் வெப்பமான காலநிலை காணப்படுகின்றமையால் வடமத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியவற்றிலுள்ள மாகாணப்பாடசாலைகளை மதியம் 12.00 மணியுடன் மூடுமாறு மாகாணக் கல்வி அமைச்சர்கள் அறிவித்துள்ளார்கள். ஆனால் அதே மாகாணங்களைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சின் கீழுள்ள தேசிய பாடசாலைகளுக்கு இந்த நடைமுறை பொருந்தாது எனவும் அவை வழமை போல நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் ஒரே பிரதேசங்களில் உள்ள மாகாணப் பாடசாலைகளுக்குத்தான் வெப்பம் அதிகரித்துள்ளது தேசிய பாடசாலைகளில் வெப்பமான காலநிலை நிலவவில்லையோ என பெற்றோர்களாலும் ஆசிரியர் தொழிற் சங்கங்களாலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன் இதனால் பாதிக்கப்படுபவர்கள் மாணவர்களேதான் எனவும் மாணவர்களின் நலனைப் பற்றி கல்வி அமைச்சுகள் சிந்திக்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. 

தற்போதைய வெப்பமான காலநிலையையும் கருத்திற்கொள்ளாமல் சில பாடசாலைகள் மனிதாபிமானமற்ற விதத்தில் மாணவர்களை  மாலை 5.00 மணி வரைக்கும் வியர்த்து ஒழுக ஒழுக மாலை நேர வகுப்பு என்று கூறி மாணவர்களை வைத்துக் கஸ்டப்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டபோதிலும் ஒரு காலத்தில் வடகிழக்கு மாகாணமாக சேர்ந்திருந்த வடக்கு மாகாணத்திற்கு வெப்பத்தின் தாக்கம் குறைவு என மாகாண கல்வி அமைச்சர் கருதியதாலோ தெரியவில்லை இப்படியான அறிவித்தல்கள் எவையும் இதுவரை விடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
« PREV
NEXT »

No comments