Latest News

May 03, 2016

தொடர்ந்தும் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் இதற்கு தலைசாய்க்க முடியாதென்கிறார் முத்துலிங்கம்
by admin - 0

தொழி­லாளர் வர்க்­கத்தில் காலிப்­பி­ரிவோ கிரு­லப்­பனைப் பிரிவோ கிடை­யாது. தொடர்ந்து தொழி­லா­ளர்கள் ஏமாற்­றப்­பட்டு வரு­கின்­றனர். இதற்கு தொடர்ந்தும் தொழி­லா­ளர்கள் தலை சாய்க்க முடி­யாது என்று சமூக அபி­வி­ருத்தி நிறு­வ­கத்தின் தலைவர் பெ.முத்­து­லிங்கம் தெரி­வித்தார்.

கண்டி தொழிற் திணைக்­க­ளத்தில் உழைக்கும் பெண்கள் முன்­னணி ஒழுங்கு செய்­தி­ருந்த மேதின நிகழ்வில் தொழிற் சங்­கங்­களின் பிரதிநிதி­க­ளுக்கு மத்­தியில் உரை­யாற்றும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது-,

இன்று வரை காலி நக­ரமா கிரு­லப்­ப­னையா என்ற வினாவே மேலோங்கி நின்­றது. தொழி­லா­ளர்­களின் தேவை­களைப் பெற்றுக் கொடுக்க அல்­லது தொழி­லாளர் உரி­மை­களை வழங்க காலி என்றோ, கிரு­லப்­பனை என்றோ அவ­சி­ய­மில்லை. தொழி­லாளர் வர்­க்கத்தில் காலிப்­பி­ரிவோ கிரு­லப்­பனைப் பிரிவோ கிடை­யாது. இது­வெல்லாம் தொடர்ந்து தொழி­லா­ளர்­களை சுரண்டி ஏமாற்றுவதற்கு மேற்­கொள்­ளும் போலிக்­க­வர்ச்­சி­க­ளாகும். இப்­ப­டி­யான விட­யங்­களில் தொழி­லாளர் விழிப்­ப­டைய வேண்டும்.

தொழி­லா­ளர்­க­ளுக்கு ஏகப்­பட்ட பிரச்­சி­னைகள் உண்டு. தொழில் உரிமை, சம்­பள உரிமை என்­றெல்லாம் பல விட­யங்கள் இருக்க மக்­களின் கவ­னத்தை வேறு பக்கம் திருப்பும் செய­லாக இது உள்­ளது என்றார்.

உழைக்கும் பெண்கள் முன்­ன­ணியின் செய­லாளர் செல்வி. யோகேஸ்­வரி கிருஷ்ணன் தெரி­வித்­த­தா­வது-,

இன்று நாட்டில் அனைத்துத் தொழில் துறை­களும் பெண்­ணியல் மய­மாக்­கப்­பட்டு வரு­வதைக் காண்­கிறோம். இது பற்றி பெண்கள் முன்­னே­றி­வ­ரு­வ­தாகக் கூறி­னாலும் உண்­மையில் குறை­வே­தன தொழிற் பட்­டா­ளத்தை உரு­வாக்கும் ஒரு விட­ய­மாக அது உள்­ளது. எல்லாத் துறை­களிலும் பெண் தொழி­லா­ளர்கள் உள் வாங்­கப்­பட்டு வரு­கின்­றனர். அவர்­களைச் சுரண்­டு­வது இலகு. எனவே பெண்கள் விடயம் தொடர்­பான தொழிற்­சங்­கங்­களின் தேவை இன்று அதி­க­ரித்­துள்­ளது.
தோட்டத் தொழி­லா­ளர்­களைப் பொறுத்­த­வரை அண்­மை­க்கா­ல­மாக சம்­பளஉயர்வு பற்றி பர­வ­லாகப் பேசப்­பட்டு வந்­தது. முதலில் 1000 ரூபா ஒரு நாளைக்கு வழங்­கப்­பட வேண்டும் என்ற கோஷம் காணப்­பட்­டது. பின்னர் அது தொழில் அமைச்சின் பேச்­சு­வார்த்­தை­யுடன் 750 ரூபா­வாக மட்டுப்படுத்­தப்­பட்­டது. பின்னர் தனியார் துறைக்கு அதி­க­ரிக்­கப்­பட்ட 2500 ருபா மாதாந்தத் தொகை தோட்டத் தொழி­லா­ள­ருக்கும் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என்ற கோஷம் மேலோங்­கி­யது. இறு­தியில் இன்று எது­வுமே நடை­மு­றையில் இல்­லாத நிலை காணப்­ப­டு­கி­றது.

வீட்டுப் பணிப் பெண்­க­ளுக்கு ஆகக்­கு­றைந்த சம்­பள நிர்­ணயம் ஒன்று வெளியி­டப்­பட வேண்டும். அவர்­க­ளது தொழில் ஒப்­பந்தம் மற்றும் தொழில் உரி­மைகள் பேணப்­பட வேண்டும். இதற்­கான அழுத்­தங்­களைக் கொடுக்க வேண்டும்.

அதி­க­மான பெண் தொழி­லா­ளர்­க­ளுக்கு விடு­மு­றை­களே வழங்­கப்­ப­டு­வ­தில்லை. போயா­தி­னத்தில் மாத்­திரம் விடு­முறை வழங்­கப்­பட்டு வரு­கி­றது. பெண்­க­ளது சில தொழிற் துறைகள் நிறு­வன மய­மாக்­கப்­படவில்லை. இதனால் எது­வித உரி­மை­க­ளையும் பெற முடி­யாத நிலை தோன்­றி­யுள்­ளது. அதி­க­மா­ன­வர்­க­ளுக்கு ஊழியர் சேம­லாப நிதி, ஓய்­வூ­தியக் கொடுப்­ப­னவு போன்­றவை செலுத்­தப்­ப­டுவ­தில்லை. எனவே இப்­ப­டி­யான சுரண்­டல்கள் தொடர்­பாக தொழி­லா­ளர்கள் விழிப்­ப­டைய வேண்டும் என்றார்.

« PREV
NEXT »

No comments