Latest News

April 10, 2016

உயரம் குறைந்த தற்காலிக தகரக் கொட்டகைகளில் தற்போது நிலவும் கடும் வெப்பத்தால் அவலப்படும் மக்களைக் நல்லாட்சி அரசும் கண்டுகொள்ளவில்லை.
by admin - 0

உயரம் குறைந்த தற்காலிக தகரக் கொட்டகைகளில் தற்போது நிலவும் கடும் வெப்பத்தால் அவலப்படும் மக்களைக் நல்லாட்சி அரசும் கண்டுகொள்ளவில்லை. 

வன்னிப் பகுதிகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உயரம் குறைந்த தகரக் கொட்டகைகளில் தற்போது நிலவும் கடும் வெப்பத்தால் வெதும்பித் தவிக்கிறார்கள். இதனை நல்லாட்சி அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை.
வன்னியில் யுத்தம் இடம்பெற்று கடந்த 6 வருடகாலமாக மீள்குடியேற்றப்பட்ட வேளை வெறும் 6 மாதங்களுக்குத் தற்காலிகமாகக் குடியிருக்கவென வழங்கப்பட்ட உயரம் குறைந்த தற்காலிக தகரக் கொட்டகைகளில் அரசினது புறக்கணிப்புக்காரணமாக அவல வாழ்க்கை வாழ்ந்து வரும் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாக பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த 6 வருடகாலமாக தற்காலிக கொட்டகைகளில் வசிப்பதால் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். உயரம் குறைந்த பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் தற்காலிக கொட்டகைகளில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், நோயாளிகள் எனப் பலரும் பெரிதும் பாதிப்புக்குள்ளாவதாகக் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றதுடன் தமது இந்நிலை பற்றி எவருமே கருத்திற்கொள்ளாதிருப்பதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
உயரம் குறைந்த தற்காலிக கொட்டகைகளில் வசிக்கும் மக்கள் பல்வேறுபட்ட உடலியல் நோய்த் தாக்கங்களுக்கும் உள்ளாகியுள்ளதாகக் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்படியான அவல வாழ்க்கையை எதிர்நோக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கல்வியைத் தொடர்வதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டங்களை அமைத்து வழங்குவதற்காக வெளிநாட்டு அரசாங்கங்கள் பெருமளவு நிதியினை கடந்த காலத்தில் அரசிடம் வழங்கியிருந்தன. கடந்தகாலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்குவதாகக் கூறி சிலருக்கு வழங்கப்பட்டபோதும் பாதிக்கப்பட்ட பெருமளவான மக்களுக்கு உரியவர்களால் அரச வீட்டுத்திட்டங்கள் வழங்குவதாகக் கூறி அறிவிக்கப்பட்டபோதிலும் இன்று வரை வழங்ககப்படவுமில்லை வழங்குவதற்கான முயற்சிகளும் எடுக்கப்படவுமில்லை.

கடந்தகாலங்களில் வழங்கப்பட்ட அரச வீட்டுத் திட்டங்கள் பல முறைகேடான வகையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் வீட்டுத் திட்டங்களைப் பெற்றவர்களில் பலர் அவற்றைக் கட்டிப் பூட்டிவிட்டு வெளியிடங்களில் சென்று வசதியான நிலையில் வாழும் நிலையில் வீட்டுத் திட்டம் கடைக்காத மக்கள் பலர் தற்போதும் உயரம் குறைந்த தற்காலிக தகரக் கொட்டகைகளிலேயே அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள்.
கடந்த காலத்தில்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதென்றால் தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கமும் பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலையைக் கருத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெருமளவான மக்கள் தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாக அவல வாழ்க்கை வாழ்ந்து அந்தரித்துத் தவிக்கும் நிலையில் வெளிநாட்டு அரசாங்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடமைத்துக் கொடுக்கவென தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திடம் வழங்கிய நிதியை மக்களுக்கு ஏற்ற வீட்டுத் திட்டங்களை அமைத்து வழங்குவதற்கு மனமின்றிய நிலையில் அரசாங்கம் தான் நினைத்தபடிதான் மக்கள் தமக்குப் பொருத்தமற்றவை என்று கருதும் பொருத்து வீடுகளை அமைத்து மக்களிடம் திணிப்பதற்கு முயற்சிக்கப்பட்டு பலரது எதிர்ப்புக்கள் காரணமாக பொருத்து வீட்டுத் திட்டம் பற்றிய ஆய்வு, மக்கள் கருத்தறிதல் என்று கூறி காலத்தைக் கடத்தி வருகின்றகின்றார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்ய முயற்சிக்காது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு அரசாங்கங்கள் வழங்கிய வீட்டுத் திட்டங்களைக்கூட உரிய காலத்தில் வழங்க மனமின்றி மனிதத் தன்மையற்ற நிலையில் தாம் நினைத்த பொருத்து வீடுகளைத்தான் மக்களுக்கு வழங்குவோம் அதனைத்தான் மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவதும் காலங்கடத்துவதும் உயரம் குறைந்த தற்காலிக தகரக் கொட்டகைகளில் தற்போது நிலவும் வெப்பத்தால் பாதிக்கப்படும் மக்கள் மத்தியில் கவலையையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

குளிரூட்டப்பட்ட வீடுகளில் வாழ்ந்து குளிரூட்டப்பட்ட வாகனங்களில் பயணிக்கும் அரசியல்வாதிகளுக்கு எங்கே தெரியப்போகின்றது உயரம் குறைந்த தற்காலிக தகரக் கொட்டகைகளில் கடந்த 6 வருட காலமாக அவல வாழ்க்கை வாழ்ந்து அவதிப்படும் மக்களின் துன்பதுயரங்கள் எனக் கூறிப் பாதிக்கப்பட்ட மக்களால் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
சிவேந்தன்
« PREV
NEXT »

No comments