Latest News

April 10, 2016

மோட்டார் சைக்கிள் என்ற போர்வையில் ஊடகவியலாளர்களை ஏமாற்றிய அமைச்சரும் ,பணம் பறிக்கும் மக்கள் வங்கியும்.
by admin - 0

ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் என்ற போர்வையில் ஊடகவியலாளர்களை ஏமாற்றிய ஊடகத்துறை அமைச்சரும் ஊடகவியலாளர்களிடம் பணம் பறிக்கும் மக்கள் வங்கியும்.

ஊடகவியலாளர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்கியுள்ளதாக கூறிக்கொள்ளும் ஊடகத்துறை அமைச்சர் கஜந்த கருணாதிலக ஊடகவியலாளர்களைக் ஏமாற்றியுள்ளார் என்பதுடன் குறித்த மக்கள் வங்கி வங்கியின் நிர்வாகச் செலவுகள், காகிதாதிகளுக்கான செலவுகளையும் சட்டத்தரணிக்கான கையொப்பப் பணம் போன்றவற்றையும் ஊடகவியலாளர்களிடமிருந்தே பெற்றுக்கொள்ளவதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் சட்டத்தரணியின் கையொப்பத்திற்கான பணமாக 7500 ரூபா முதல் 10,000 ரூபா வரை வழங்கவேண்டும். வங்கியின் காகிதாதிகள், நிர்வாகச் செலவாக 1500 ரூபாவும் பதிவுக் கட்டனமாக 8500 ரூபாவும் என 19000 ரூபாவுக்கு மேல் நேரடியாகவே உடனடியாக வழங்கவேண்டும். இதைவிட வருடார்ந்தம் முழுக்காப்புறுதிப் பணம் செலுத்த வேண்டும். 
இவையெல்லாவற்றையும் செலுத்தி மோட்டார் சைக்கிளைப் பெற்றுக்கொண்டாலும் மோட்டார் சைக்கிள் குறித்த ஊடகவியலாளருக்குச் சொந்தமானதல்ல மக்கள் வங்கிக்கே சொந்தமானது. மக்கள் வங்கியிடமே மோட்டார் சைக்கிளுக்கான உரிமைச் சான்றுப் புத்தகம் வழங்கிவிடவேண்டும். கடன் தொகையைச் செலுத்தப் பிந்தினால் மோட்டார் சைக்கிளை வங்கி எங்வேளையிலும் பறிமுதல் செய்யும் என்ற நிபந்தனையும் உண்டு.

இப்படியாக நாட்டடிலுள்ள மோட்டார் சைக்கிளுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட 1809 ஊடகவியலாளர்களிடமும் மக்கள் வங்கி நிர்வாகச் செலவு, காகிதாதிகளுக்கான செலவுகள், சட்டத்தரணிக்கான கையொப்பப் பணம் என வாங்கினால் எவளவு பெருந்தொகைப்பணம் கிடைக்கும்? 
மேற்படி மோட்டார் சைக்கிளுக்காக ஊடகவியலாளர்கள் சட்டத்தரணி அலுவலகம், வங்கி அலுவலகம் என பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து அலைக்களிக்கப்படுகின்றார்கள் ஊடகத்துறை அமைச்சரால்.

இதில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதிகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மக்கள் வங்கி அலுவலகம், சட்டத்தரணி அலுவலகம் என அலைந்து திரிந்துவிட்டு ஏமாற்றமடைந்த நிலையில் மோட்டார் சைக்கிள் பெறும் முயற்சியிலிருந்து விலகியுள்ளார்கள்.

கடந்த மாதம் வடபகுதிக்கு வருகைதந்த ஊடகத்துறை அமைச்சர் கஜந்த கருணாதிலக தாம் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கியுள்ளதாக்க் கூறி அவற்றுக்கான அனுமதிக் கடிதங்களை வழங்கியதுடன் விரைவாகவும் எந்தவித சிரமமும் இன்றி மோட்டார் சைக்கிளைப் பெற்றுக்கொள்ளுமாறும் ஊடகவியலாளர்களிடம் கூறி ஏமாற்றியிருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

ஊடகவியலாளர்களுக்கு அரசு மோட்டார் சைக்கிள் வழங்குவதாகக் கூறி கடந்த வருடம் கொழும்புக்கு அழைக்கப்பட்ட ஊடகவியலாளர்களிடம் பல விதிமுறைகளின் அடிப்படையில் வாய்மொழியாகவும் ஊடகவியலாளர்களின் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டும் நேர்முகப்பரீட்சைகள் நடத்தப்பட்டன. அதனடிப்படையில் மோட்டார் சைக்கிளைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களென சிலர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். மோட்டார் சைக்கிள் பெறுவதற்குத் தகுதியுடைய ஊடகவியலாளர்களையே மக்கள் வங்கி தனது கைவரிசையைக் காட்டியுள்ளது.

கடந்த கால அரசாங்கங்கள் மக்களைத்தான் ஏமாற்றி வந்தன தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஜனநாயகத்தின் நான்காவது தூண்களாகக் கருதப்படும் ஊடகவியலாளர்களையே ஏமாற்றியுள்ளதென்றால் இவர்களின் நல்லாட்சிச் சிறப்பு சிறந்த முறையில் வெளிப்படுத்தப்படுகின்றதல்லவா.
« PREV
NEXT »

No comments