இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் 2016 ம் ஆண்டுக்கான தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து ஐம்பத்து மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி போட்டியின் மாவட்ட மட்டத் தெரிவுப்போட்டிகள் முதல் முறையாக கிளிநொச்சியில் 9ம், 10ம் திகதிகளில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் இப் போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் இருநூறு வரையான வீர்ர்கள் பங்குகொண்டமை சிறப்பம்சமாகும்.
இப்போட்டிகள் 8 வயதின் கீழ், 10 வயதின் கீழ், 12 வயதின் கீழ், 14 வயதின் கீழ், 16 வயதின் கீழ், 18 வயதின் கீழ் என்ற வயதுப்பிரிவுகளில் ஆண், பெண் பிரிவுகளாக நடைபெற்றன. இப்போட்டிகளின் பிரதம நடுவராக இலங்கை சதுரங்கச் சம்மேளன நடுவர் சஜீவ சுகத தாச அவர்களும் கிளிநொச்சி மாவட்ட சதுரங்கச் சங்க நடுவர்களும் கடமையாற்றினர்.
இப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களும், குறித்த புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களும்
என ஐம்பத்து மூன்று பேர் தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
தேசிய மட்டப் போட்டிகள் எதிர்வரும் 20ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை கொழும்பு றோயல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக இலங்கை சதுரங்கச் சம்மேளனம் அறிவித்துள்ளது.
No comments
Post a Comment