Latest News

April 10, 2016

ஒருபுறம் காணி விடுவிப்பு மறுபுறம் அபகரிப்பு
by admin - 0

அர­சாங்­கத்தால் ஒரு­புறம் காணிகள் விடு­விக்­கப்­ப­டு­கின்ற போதும் மறு­புறம் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­படும் நட­வ­டிக்­கைகள் தொடர்ந்து வரு­கின்­றன. எனவே, வடக்கில் படை­யி­னரால் முகாம்­களை விஸ்­த­ரிப்பு செய்­வ­தற்­கென காணிகள் சுவீ­க­ரிப்பு செய்­யப்­ப­டு­வ­தனை உடன் நிறுத்த உட­னடி நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும். இதற்­கான அறி­வித்தல் ஜனா­தி­ப­தியால் வெளி­யி­டப்­படும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, நல்­லி­ணக்க அர­சாங்­கத்­துடன் நாம் தொடர்ச்­சி­யான பேச்­சு ­வார்த்­தை­களை மேற்­கொண்டு வரு­கின்ற போதும் கடந்த ஆட்­சி­கா­லத்தில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட காணி சுவீ­க­ரிப்பு தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்தல் தற்­போதும் நடை ­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வதால் இத்­த­கைய பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது.

இவை தொடர்பில் அண்­மையில் காணி அமைச்­சரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம். குறிப்­பாக நல்­லி­ணக்க அர­சாங்கம் ஒரு­ப­குதி காணி­களை விடு­வி்த்து வரு­கின்ற போதும் மற்­றொ­ரு­புறம் காணி­களை சுவீ­க­ரிக்கும் அறி­விப்பை விடுக்­கின்­றது. எனவே அத்­த­கைய செயற்­பா­டுகள் நிறுத்­தப்­பட வேண்டும். இவை தொடர்பில் காணி அமைச்­ச­ருடன் விரி­வாக கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம்.

வடக்கில் காணி சுவீ­க­ரிப்­ப­தற்­கான அள­விடும் பணி­க­ளுக்­கான அறி­வித்தல் கடந்த கால­அ­ர­சினால் அறி­விக்­கப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலின் படி நடை­பெ­று­வ­தாக சுட்­டிக்­காட்­டிய காணி அமைச்சர் எம்மை இந்த விடயம் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­து­ரை­யா­டு­மாறு கேட்­டுக்­கொண்டார். இதே­வேளை வடக்கு மாகாண ஆளு­ந­ரி­டமும் குறித்த விடயம் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. இவ்­வி­டயம் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­து­ரை­யாடி இதற்­கான நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஆளுநர் உறு­தி­ய­ளித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது

மேலும் எது எப்­ப­டி­யி­ருந்­தாலும் நல்­லாட்சி அர­சாங்கம் எமது மக்­களின் காணி­களை முழு­மை­யாக விடு­வித்து அவர்­களின் இயல்பு வாழ்க்­கைக்கு தேவை­யா­ன­வற்றை செய்ய வேண்டும்.

கடந்த கால அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் இந்த நல்­லி­ணக்க அர­சாங்­கத்தில் இல்­லா­விட்­டாலும் மக்­களின் காணி­களை சுவீ­க­ரிக்க எடுக்கும் நட­வ­டிக்­கையை நாம் ஏற்றுக் கொள்ள முடி­யாது

எமது மக்கள் சொந்த இடத்தில் மீளக்­கு­டி­யேற வேண்டும்.இதற்­கான ஏற்­பா­டு­களே முதலில் செயற்­ப­டுத்த வேண்டும் இதுவே மக்­களின் தேவை­யாக உள்­ளது. காணி சுவீ­க­ரிப்பு நட­வ­டிக்­கைகள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்டும். இத்­த­கைய நட­வ­டிக்கை தொடர்பில் ஏற்­க­னவே ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­து­ரை­யா­டப்­பட்­டாலும் அடுத்த வாரம் அளவில் ஜனா­தி­பதி, பிர­த­ம­ருடன் இது தொடர்பில் மீண்டும் கலந்­து­ரை­யாடி உறு­தி­யான முடிவு எடுக்­கப்­படும் எனத் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் மண்கும்பான் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினரது தேவைகளுக்காக சுவீகரிப்பதற்கு நில அளவை திணைக்களம் கடந்த வௌ்ளிக்கிழமை மேற்கொண்ட முயற்சி காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகளின் முற்றுகை போராட்டத்தால் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments