Latest News

April 20, 2016

கருணாநிதியை தோற்கடிப்பதில் நம் இன மானம் காக்கப்படும்
by admin - 0

விழுந்த தி.மு.க. இனி எழுந்­த­தாக சரித்­திரம் இருக்கக் கூடாது. கரு­ணா­நி­தியைத் தோற்­க­டிப்­பதில் தான் நமது இன­மானம் காக்­கப்­படும் என்று நாம் தமிழர் கட்­சியின் ஒருங்­கி­ணைப்­பளர் சீமான் தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, "பெருந்­த­லைவர் காம­ரா­ஜ­ரிடம் 65 வயதில் முத­ல­மைச்சர் பதவி வேண்­டுமா என்று கேட்­டீர்­களே, அவ­ரு­டைய பேரன் கேட்­கிறேன், 94 வயதில் உங்­க­ளுக்கு முத­ல­மைச்சர் பதவி தேவையா?.

கடந்த ஐந்­தாண்­டு­களில் கரு­ணா­நிதி ஒரு­மு­றை­யா­வது சட்­டப்­பே­ர­வைக்கு போனாரா? 94 வயதில் முத­ல­மைச்சர் பத­விக்கு ஆசைப்­ப­டு­கிறார். நடக்க முடி­யலை, உட்­கார முடி­யலை, பத்து பேர் பரா­ம­ரிக்க தேவைப்­ப­டு­கி­றார்கள். எப்­படி ஆட்சி செய்யப் போகிறார். வெளி­நாட்­டுக்­காரன் கேட்பான் (“That old man is the chief minister of Tamilnadu?”). உங்க வீட்­டுல ஒரு தாத்தா இருந்தா என்ன பண்­ணு­வீங்க? நாட்­டுல ஒரு தாத்தா இருந்தால் முத­ல­மைச்சர் பத­வியா கொடுப்­பீங்க? 65 வய­தான பெருந்­த­லைவர் காம­ரா­ஜரைக் கேட்­கிறார் இந்த வயதில் உங்­க­ளுக்கு முத­ல­மைச்சர் நாற்­காலி வேண்­டுமா என்று. அதற்கு காம­ராஜர் சொல்­கிறார். “அட போப்பா, நீ உட்­கார்ந்த நாற்­கா­லி­யில நான் உட்­கா­ரு­வேனா?” என்று. அந்தப் பெருந்­த­லை­வ­ரிடம் 65 வயதில் முத­ல­மைச்சர் பதவி வேண்­டுமா என்று கேட்­டீர்­களே, 94 வயதில் உங்­க­ளுக்குத் தேவையா முத­ல­மைச்சர் பதவி?

பெருந்­த­லைவர் காம­ராஜர் தான் இந்த நாட்டில் தூய்­மை­யான நல்­லாட்சி நடத்­திய தலைவர். அவ­ரையே கல்­லூரி மாண­வ­ரான தெலுங்கர் சீனி­வா­சனைக் கொண்டு தோற்­க­டித்­தார்கள் தி.மு.க.வினர். மக்­களே சிந்­திப்­பீர்கள். காம­ரா­ஜரை சொந்த நிலத்தில் யார் தோற்­க­டித்­தார்­களோ, அவர்­களை அவர்­களின் சொந்த நிலத்தில் தோற்­க­டிக்க வேண்டும். அப்­போது தான் வர­லாற்றில் இந்த நிலம் தாங்கி இருக்­கின்ற பெரும்­பழி தீரும்.

ஏய், வஞ்சம் வைத்து தீர்த்­தாண்டா தமிழன், தோற்­க­டிச்சு அனுப்­பிட்­டாண்டா தமிழன் என்று சொல்­லு­வ­தற்கு நீங்கள் வாய்ப்புத்தர வேண்டும்.
இரண்­டு­பேரும் மாறி மாறி தமிழ்­நாட்டை வீணாக்கி விட்­டார்கள். அம்மா மிக்சி கொடுத்தார், கிரைண்டர் கொடுத்தார், அந்­தம்­மா­வுக்கே எங்­கம்மாதான் காசு கொடுத்­தார். மக்கள் வரிப்­பணம் அது. இது­வரை நடந்­ததை எண்­ணிப்­பார்த்து நீங்கள் வாக்­க­ளிக்க வேண்டும்.

விழுந்த தி.மு.க. இனி எழுந்­த­தாக சரித்­திரம் இருக்கக் கூடாது. அ.தி.மு.க. அதுவே சரிந்து விழும். கரு­ணா­நி­தியைத் தோற்­க­டிப்­பதில் தான் நமது இன­மானம் காக்­கப்­படும். மே 19ஆம் திகதி வாக்கு எண்ணும் போது சொந்தத் தொகு­தியில் கரு­ணா­நிதி தோற்றார் என்­கிற செய்தியைக் கேட்கும் போது நான் நினைப்பேன், “என்னுடைய திருவாரூர் அப்பன், ஆத்தா, சித்தப்பன், பெரியப்பன், எல்லாம் உப்பு போட்டு சோறு தின்கிறார்கள் என்று...மானத் தமிழன் இருக்கிறான்” எனத் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments