Latest News

April 20, 2016

சித்த மருத்துவத்துறை தமிழ்ப் பட்டதாரிகள் அரச நியமனத்தில் புறக்கணிப்பு?
by admin - 0

யாழ்.பல்­க­லைக்­க­ழகம் மற்றும் கிழக்கு பல்­க­லைக்­க­ழக சித்த மருத்­து­வத்­து­றையில் கல்­வி­கற்று பட்டம்பெற்ற மாண­வர்கள் இலங்கை ஆயுள்­வேத மருத்­துவ சேவையின் ஆரம்ப தரத்­தி­லான மருத்­துவ உத்­தி­யோ­கத்­தர்­ப­த­விக்கு விண்­ணப்­பிக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ள­தென கவலை தெரி­விக்­கின்­றனர். தமிழ் பட்­ட­தா­ரிகள் விண்­ணப்­பிக்க முடி­யாத நிலை திட்­ட­மிட்ட புறக்­க­ணிப்பா எனவும் விசனம் தெரி­வித்­துள்­ளனர்.

சுகா­தார போஷாக்கு மற்றும் சுதேச மருத்­து­வத்­துறை அமைச்சு இலங்கை ஆயுள்­வேத மருத்­துவ சேவையின் ஆரம்ப தரத்­தி­லான மருத்­துவ உத்­தி­யோ­கத்தர் பத­விக்கு விண்­ணப்­பங்­களை கோரி­யுள்­ளது. பட்டச் சான்­றிதழ் 2015 மே முதலாம் திகதி வரை செல்­லு­ப­டி­யாகும் நிலை உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­க­லா­மென அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால், யாழ்.பல்­க­லைக்­க­ழகம் மற்றும் கிழக்குப் பல்­க­லைக்­க­ழக சித்த மருத்­து­வத்­து­றையில் பயின்று பட்டம் பெற்­ற­வர்­களின் சான்­றிதழ் செல்­லு­ப­டி­யாகும் காலம் 2015 ஜூலை 30 ஆம் திகதி ஆக உள்­ளது. இதனால் சித்­த­ம­ருத்­து­வத்­து­றையில் பட்டம் பெற்று டாக்­டர்­க­ளாக பணி­யாற்ற தகு­தி­யுள்ள 46 தமிழ் மாண­வர்கள் விண்­ணப்­பிக்­க­மு­டி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ள­தென கவலை தெரி­விக்­கின்­றனர். இந்த விடயம் தமிழ் மாண­வர்­களை ஏமாற்­றத்­திற்கு உள்­ளாக்கி இருப்­ப­தோடு அவர்கள் நிரந்­த­ர­மான நிய­மனம் பெறு­வ­தற்கு ஒரு வரு­டத்­திற்கு மேல் காத்­தி­ருக்­க­வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டி­ருப்­ப­தாக தமிழ் சித்த மருத்­துவ பட்­ட­தா­ரிகள் விசனம் தெரி­விக்­கின்­றனர். பாதிப்­புக்­குள்­ளா­கிய சித்­த­ம­ருத்­துவ பட்­ட­தாரி ஒருவர் தகவல் தெரி­விக்­கையில்,

நாட­ளா­விய ரீதியில் சித்த மருத்­துவம் மற்றும் யூனா­ரிசம் மருத்­து­வத்­திற்குத் தெரிவு செய்­யப்­பட்டு கற்­ற­வர்­களில் யாழ்.பல்­க­லைக்­க­ழகம் மற்றும் கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பயின்ற சித்த மருத்­துவ மாண­வர்கள் உள்­ளக பயிற்­சியை நிறைவு செய்­வதில் கால­தா­மதம் ஏற்­பட்­ட­மை­யினால் நிரந்­தர நிய­மனம் பெறு­வ­தற்கு ஒரு வரு­டத்­திற்கு மேல் காத்­தி­ருக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. அதே­நேரம் எங்­க­ளுடன் ஒரே கல்வியாண்டிற்குத் தெரிவு செய்யப்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் சேவை மூப்பிலும் ஒரு வருடத்தால் மூத்த-வர்களாக இருக்கப்போகின்றனர். இது ஒரு வகை-யில் இன ரீதியிலான புறக்க-ணிப்-பாக கொள்ளவேண்டியுள்ளது எனத் தெரி-வித்தார்.
« PREV
NEXT »

No comments