Latest News

April 20, 2016

கிரிக்கெட் நடத்தி நடிகர்களை ஜோக்கர் ஆக்கிய நடிகர் சங்கத்தில் இருக்க மாட்டேன்: சிம்பு ஆவேசம்
by admin - 0

நடிகர் சங்கத்தில் இருந்து விலகப்போவதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் நடிகர்களை ஜோக்கர்கள் ஆக்கியதுதான் மிச்சம் என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் சிலம்பரசன். ஆனால், விஷால் அணி வெற்றி பெற்று, நாசர் தலைவராகியுள்ளார். இந்நிலையில், நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடிகர் சங்கத்தின் சார்பில் நடிகர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிம்பு இல்லை 

இதில் பங்கேற்க, அஜித், விஜய் ஆகிய மாஸ் ஹீரோக்கள் மட்டுமின்றி, சிம்புவும் வரவில்லை. அஜித் மற்றும் விஜய் ஆகியோரை விஷால் விமர்சனம் செய்ததாகவும், இதற்காக சிம்பு கோபப்பட்டதாகவும் கூட தகவல்கள் வெளியாகின.

விலக முடிவு 

இந்நிலையில் சிம்பு இன்று, ஆங்கில வெப்சைட் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பல்வேறு காரணங்களுக்காக நடிகர் சங்கத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

உதவியே இல்லை நடிகர்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் உதவத்தான் நடிகர் சங்கம் உள்ளது. ஆனால், எனக்கே ஒரு பிரச்சினை வந்தபோது கூட நடிகர் சங்கம் ஒரு உதவியையும் செய்யவில்லை.

சமீபத்தில் நடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டி என்னை மிகவும் அப்செட் ஆக்கிவிட்டது. அந்த போட்டியின் மூலம், பெரும்பாலான நடிகர்கள் ஜோக்கர்களாக்கப்பட்டனர். (இப்போட்டியில் சிறுபிள்ளைத்தனமாக நட்சத்திரங்கள் கிரிக்கெட் ஆடியது 

பீப் பாடல் 

நடிகர் சங்கத்தின் உறுப்பினர் அட்டையை திருப்பி கொடுத்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு சிம்பு பேட்டியளித்ததாக அந்த வெப்சைட் செய்து வெளியிட்டுள்ளது. சமீபத்தில் பீப் பாடலுக்காக காவல்துறை 




« PREV
NEXT »

No comments