Latest News

March 12, 2016

சரத் பொன்சேகாவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் சவால்!
by admin - 0

ஶ்ரீலங்கா பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இலங்கை இராணுவத்தின் குற்றமிழைக்காத செயற்பாட்டை நிரூபிக்க வேண்டுமானால், சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உடன்பட வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் சவால் விடுத்துள்ளார்.

த காடியன் செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில், தமிழ் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் தமிழர்கள் கொல்லப்பட்டமையை சரத் பொன்சேகா மறுத்திருந்தார். போர்க்குற்ற விசாரணை ஒன்று வரும் போது தமது இராணுவத்தின் உண்மைத்தன்மையை நிரூபிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள உருத்திரகுமாரன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைன் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்களின் விபரமும் அதற்கான நீதிப்பரிந்துரைகளையும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இதன்போது சரத் பொன்சேகா முன்வந்து தமது பதிலை வழங்க வேண்டும் என்று உருத்திரகுமாரன் கேட்டுள்ளார்.

இதேவேளை இறுதிப்போரின் போது பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால, போர்க்குற்ற சர்வதேச விசாரணை தொடர்பில் எவ்வாறு நியாயப்படுத்தவுள்ளார் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் உருத்திரகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

« PREV
NEXT »

No comments