Latest News

March 12, 2016

பாபர் வீதி வன்முறையாளர்கள் 7 பேருடன் சேர்த்து 17 பேருடன் பொலிஸ் நிலையத்தில் நடந்தவை
by admin - 0

பாபர் வீதி வன்முறையாளர்கள் 7 பேருடன் சேர்த்து 17 பேருடன் பொலிஸ் நிலையத்தில் நடந்தவை


கடந்த சிவராத்திரி கலைநிகழ்வுகள் நடைபெற்ற போது அங்கு தாக்குதல் மேற்கொண்ட முஸ்லிம் காடையர்கள் ஏழு பேர்களுக்கு எதிராக ஹிந்து சம்மேளனத்தின் தேசிய ஆலோசகர் ராஜு பாஸ்கரன் அவர்களால்   கொடஹென போலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் மீதான விசாரணைகள் இன்று நடைப்பெற்றது .இவ்விசாரணைகளின் போது சம்பந்தப்பட்ட ஏழு பேர் தவிர மேலதிகமாக ஏழு  பேருடன் மொத்தமாக சட்டத்தரணியுடன் சேர்த்து பதினேழு பேர் போலீஸ் நிலையத்திற்கு வருகை தந்ததுடன் முறையீட்டாளர் சார்பில் ராஜு பாஸ்கரன் மாத்திரம் ஆஜராகி தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார் .

இதன் போது முஸ்லிம் காடையர்கள்  பலதடவைகள் ராஜு பாஸ்கரன் அவர்களுக்கு கொலை  மிரட்டல் விடுத்தவண்ணமே இருந்தனர். தருணம் பார்த்து காத்திருந்த ராஜு பாஸ்கரன் அவர்கள் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தர்கரீதியாக அவர்களுடைய செயற்பாடுகளை விவரித்தார்.

இதன் போது முஸ்லிம் காடையர்கள் பின்வரும் விடயங்களை கூறினர் ."பாபர் வீதியில் இருப்பது கோவிலே இல்லை . அங்கு பூஜை செய்யக்கூடிய சூழ்நிலையும் இல்லை . அதுமட்டும் இன்றி உங்களுக்கும் எங்களுக்கும் இருக்கும் பிரச்சினை என்ன ? எமக்கு அங்குள்ள மக்களுடன்தான் பிரச்சனை. நீங்கள் யார் ?(ராஜு பாஸ்கரன் )அதேபோன்று அருன்காந்த் என்பவன் யார் ?எங்களுக்கும் உங்களுக்கும் பிரச்சினை இல்லை நாம் ஏன்  போலீஸ் நிலையத்தில் அடித்துக்கொள்ள வேண்டும் .? ஏன் இந்த விடயத்தை ஊடகங்களுக்கு சொன்னீர்கள் ?எது எப்படியோ அடுத்த வருடம் தேர் திருவிழா செய்ய விடமாட்டோம் ..." இவை அனைத்திற்கும் சிங்கம் போல் கர்ஜனை செய்து ராஜு பாஸ்கரன் அவர்கள் பதிலடி கொடுத்தார் 

அவை பின்வருமாறு ."நான் மத வெறியன் அல்ல. நான் எனது ஏழை ஹிந்து மக்களுக்காகவே அங்கு சென்றேன் . இனியும் எமது அமைப்பு அங்கு செயற்படும் .அங்கிருக்கும் கோவில் சின்னதோ பெரியதோ அதைப்பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை . அது பற்றி கவலைப்பட ஹிந்து கலாச்சார திணைக்களம் உள்ளது . எனக்கும் உங்களுக்கும் தனிப்பட்ட பிரச்சினை இல்லை . ஆனால் எமது மக்களுக்கு பிரச்சினை வரும்போது என் கண்முன்னாலேயே என் மக்களை அவமதிக்கும் போது என்னால் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது ஏன் என்றால் நான் சூடு சுரணை அற்ற ஹிந்து  கிடையாது . ஊடகங்களுக்கு கூறியது யார் என்று எனக்குத் தெரியாது . அது தவிர ஊடகங்களில் வந்த செய்தி பொய்யும் அல்ல . நீங்கள் உண்மைக்கு பயப்படுகின்றீர்கள். அதனால் தான் ஊடகங்கள் உங்கள் சுயரூபத்தை வெளிக்காட்டிய காரணத்தால் அதைப்பற்றி பயப்படுகின்றீர்கள். நீங்கள் எமது சமுதாயத்தை நன்றாக விழிபூட்டகூடிய புற சூழலை ஏற்படுத்தியுள்ளீர்கள் எமது கோவிலின் திருவிழாவை அடுத்த வருடம் நடத்த வேண்டுமா இல்லையா என்று தீர்மானிக்கும் அளவுக்கு நீங்கள் யார் ?உங்களை யார் என்று உங்கள் சமூகத்திற்கே தெரியுமா என்று எனக்குத் தெரியாது. எது எப்படியோ நான் நீங்கள் ஏழு பேரும் வன்முறையில் ஈடுபட்டதை நேரடியாக கண்டேன் ஆகவே நீங்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டியவர்கள் " என்றார் .

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த போலீஸ் உயர் அதிகாரி கூறியதாவது "நான் உண்மையிலேயே நினைத்தேன்..நீர் சாராயம் குடித்துவிட்டு போதையில் தான் ஏதோ வன்முறையில் ஈடுபட்டீர் என்று . ஆனால் அடுத்த வருடம் தேர் திருவிழாவை நடத்த விடமாட்டோம் என்று நீர் கூறியதில் இருந்து இது வெறும் வன்முறை அல்ல ..இதுதான் மத தீவிரவாதம் என்பதை உனக்கு நான் புரிய வைக்கின்றேன் .

சட்டதரனியவர்களே ..வன்முறையில் ஈடுபட்ட இருவருக்கும் என்னால் பிணை வழங்க முடியாது .நீங்கள் நீதிமன்றத்தை நாடுங்கள் . கலவரம் நடைபெற்ற போது அங்கு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட எஞ்சிய ஏழு பேரும் மீண்டும் நாளை நடைபெறும் இணக்கசபை விசாரணைகளுக்கு ஆஜராகவேண்டும் என்றார் .தாக்குதலில் ஈடுபட்ட முஸ்லிம் காடையர்கள் இருவரையும் கொடஹென போலீசார் நீதிமன்றில் ஆஜர் செய்தனர். 

ஒன்று பட்ட அமைப்பு சக்தியே எதிர்காலத்தில் இந்துக்களின் இருப்பை தீர்மானிக்கும் -நா .அருண்காந்த்
தலைவர் இந்து சம்மேளனம் -இலங்கை .
« PREV
NEXT »

No comments