Latest News

March 19, 2016

தலைவர் பிர­பா­கரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரை தேட ஆரம்பிக்கும் ஸ்ரீலங்கா அரசு
by admin - 0

விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­கரன், பொட்டு அம்மான், ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­கி­ர­ம­துங்க ஆகியோர் தொடர்­பிலும் விசாரணை நடத்தி உண்­மை­களை கண்­ட­றியும் பணிகளை மேற் கொள்வோம் என அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

யுத்தக் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் எழுந்­துள்ள சர்­வ­தேச அழுத்­தங்­களில் இருந்து நாட்­டையும் இரா­ணு­வத்­தையும் காப்­பாற்றும் ஒரே நோக்­கத்­தி­லேயே ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் கைகோர்த்­துள்­ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.

இறுதி யுத்­தத்தில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் சம்­ப­வங்கள் தொடர்பில் முன்னாள் இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சேகா தொடர்ச்­சி­யாக பல கருத்­து­களை முன்­வைத்து வரும் நிலையில் அர­சாங்கம் இந்த விவ­கா­ரங்கள் தொடர்பில் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளப்­போ­கின்­றது என வின­விய போதே அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்.

யுத்தக் குற்­றச்­சாட்டு தொடர்பில் கடந்த காலத்தில் இருந்து ஏற்­க­னவே பல­வி­த­மான கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்நிலையில் இப்­போது அமைச்சர் சரத் பொன்­சேகா கூறி­வரும் கருத்­துகள் மேலும் பல திருப்­பங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இறுதி யுத்­தத்தின் கடைசிக் கட்­டங்கள் தொடர்­பிலும், பிர­பா­கரன், பொட்டு அம்மான், லசந்த விக்­கி­ர­ம­துங்க ஆகியோர் தொடர்­பிலும் இப்­போது பல கருத்­து­களை முன்­வைத்­துள்ளார். எவ்­வாறு இருப்­பினும் இந்த விவ­கா­ரங்கள் தொடர்பில் ஆராய்ந்து உண்­மை­களை கண்­ட­றியும் வேலை­யினை அர­சாங்கம் மேற்­கொள்ளும். அதேபோல் இறுதி யுத்­தத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் யுத்த குற்­றங்கள் மற்றும் வெள்­ளைக்­கொடி விவா­க­ரத்­திலும் எழுந்­துள்ள சர்ச்­சைகள், இறுதி யுத்த நேரத்தில் இரா­ணு­வத்­தினர் வசம் சர­ண­டைந்த பொது­மக்­களின் நிலை­மைகள் தொடர்பில் பொது­மக்கள் முன்­வைத்­து­வரும் வாக்­கு­மூ­லங்கள் தொடர்­பிலும் அர­சாங்கம் தீர்­வி­ர­மாக ஆராய்ந்து விரைவில் உண்­மை­களை கண்­ட­றியும் .

மேலும் இந்த விவ­கா­ரங்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­களின் மூல­மாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும் என சரத் பொன்­சேகா கூறி­வ­ரு­கின்றார். ஆனால் இப்­போ­தி­ருக்கும் நிலையில் சர­வ­தேச விசா­ர­ணைகள் மேற்­கொண்டு இந்த விட­யங்­களை கண்­ட­றிய வேண்­டிய அவ­சியம் இல்லை. இப்­போ­தி­ருக்கும் நிலையில் நாம் உள்­ளக விசா­ர­ணைகள் மூல­மாக இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடியும். அதையே அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது. கடந்த ஆட்­சியில் உள்­ளக விசா­ர­ணை­களின் மூல­மாக எந்த தீர்வும் கிடைக்­காத கார­ணத்­தி­னா­லேயே பல சிக்­கல்கள் எழுந்­தன.

 அவ்­வா­றான நிலையில் சர­வ­தேச தரப்பின் அழுத்­தங்­களில் இருந்து நாட்­டையும் இரா­ணு­வத்­தையும் காப்­பாற்ற வேண்டும் என்ற நோக்­கத்­திற்­கா­கவே ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆகிய கட்­சிகள் கூட்டு சேர்ந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்து இந்த பிரச்­சி­னைக்கு தீர்­வுக்­கான முயற்­சிக்கின்றன.் இப்­போது உள்­ளக பொறி­மு­றைகள் சரி­யாக நடை­பெற்­று­வ­ரு­கின்­றன. எவ்­வாறு இருப்பினும் யுத்தத்தின் இறுதித் தருணங்கள் தொடர்பில் அரசாங்கம் தீவிரமான விசாரணைகளை மேற்கொள்ளும். இராணுவம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றாலும் அதில் எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவத்தை தண்டிக்கும் வகையில் விசாரணை பொறிமுறையாக அமையாது என்றார்.
« PREV
NEXT »

No comments