Latest News

March 18, 2016

தெஹிவளை நால்வர் மரணம் மின்னேற்றப்பட்டுக்கொண்டிருந்த தொலைபேசி வெடித்ததில் தீ ஏற்பட்டதா?
by admin - 0

தெஹி­வளை, கவு­டான வீதியில் உள்ள மூன்று மாடி­களைக் கொண்ட வீடொன்றின் கீழ் மாடியில் இருந்து, வர்த்­தகர் ஒருவர் அவ­ரது குடும்­பத்தார் சகிதம் சட­ல­மாக மீட்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் தெஹி­வளை பொலிஸ் நிலை­யத்தின் சிறப்புக் குழு­வினர் விசா­ர­ணை­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.
வீட்டின் ஒரு பகு­தியை மட்டும் தீ எப்­படி ஆக்­கி­ர­மித்­தது, அதற்­கான காரணம் என்ன போன்ற கேள்­வி­க­ளுக்கு விடையை அறி­யவும் மர­ண­ம­டைந்த நால்­வரின் மர­ணத்­துக்கு காரணம் என்ன என்­பதை உறுதி செய்­து­கொள்­ள­வுமே மேல­திக விசா­ர­ணைகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

வீட்டின் சமை­ய­ல­றையை ஒட்­டி­யுள்ள பெண்டி கபட் அருகே இருந்த இலத்­தி­ர­னியல் ஓவன் மேல் நவீன கைய­டக்கத் தொலை­பே­சி­யொன்று மின் ஏற்­று­வ­தற்கு போடப்­பட்­டி­ருந்­துள்­ள­மையும் இதுவரை முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் தெரி­யவந்­துள்­ளது. இந்த நிலையில் அதன் ஊடாக தீ ஏற்­பட்­டதா என்ற சந்­தே­கமும் எழுந்­துள்­ளது. கைய­டக்கத் தொலை­பே­சியின் எரிந்த பாகங்கள், இலத்­தி­ர­னியல் ஓவனின் பாகங்கள், எரிந்த மின் ஏற்­றியின் பகுதி உள்­ளிட்­டவை தீ ஆக்கி­ர­மித்த விதம், அதற்­கான காரணம் ஆகி­ய­வற்றை உறுதி செய்ய அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ளர்­களால் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. நேற்­றைய தினம் ஸ்தலம் விரைந்த அரச இர­சா­யன பகுப்­பாய்வு அதி­கா­ரி­களைக் கொண்ட விசேட குழு இந்த நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

ஓவன் மீது மின் ஏற்­று­வ­தற்கு போடப்­பட்ட கைய­டக்கத் தொலை­பேசி வெடித்து அதன் ஊடாக ஓவனும் தீப்­பி­டித்து எரிந்த நிலை­யி­லேயே அது பெண்ட்ரி கபட் மீது பர­வி­யி­ருக்­கலாம் எனவும் அதனால் கதவு மூடப்­பட்ட அந்த சொகுசு வீட்­டினுள் நச்சு கலந்த வாயு பரவி அதனை சுவா­சித்­ததால் குறித்த நால்­வரும் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் எனவும் விசா­ர­ணை­யா­ளர்­களால் சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது.
நேற்று முன்தினம் மேற்­கொள்­ளப்­பட்ட பிரேத பரி­சோ­தனை அறிக்­கையில் நச்சு கலந்த புகை­யுடன் கூடிய வாயுவை சுவா­சித்­தமை ஊடாக மர­ணங்கள் சம்­ப­வித்­துள்­ளமை தொடர்பில் சந்­தே­கிக்­கத்­தக்க கார­ணி­களை உதவி சட்ட வைத்­திய அதி­காரி பிர­சாந்­தினி செனரத் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.
பெரும்­பாலும் காபன் மொனக்­சைட்டை ஒத்த நச்சு வாயு­வொன்று இவ்­வாறு அந் நால்­வரின் உட­லிலும் கலந்­தி­ருக்க வேண்டும் என சந்­தேகம் வெளி­யிட்ட அவர் குறித்த நச்சுப் பதார்த்தம் என்ன என்­பதை கண்­ட­றிய நான்கு சட­லங்­க­ளி­னதும் மாதி­ரி­களை மேல­திக ஆய்­வு­க­ளுக்­காக அர­சாங்க இர­சா­யன பகுப்­பாய்­வா­ள­ருக்கு அனுப்பி வைத்­துள்ளார்.

இந்த நிலையில் மர­ண­ம­டைந்த நால்­வரின் சட­லங்­களும் நேற்று மத கிரி­யை­களின் பின்னர் தெஹி­வளை மற்றும் களு­போ­வில பகு­தி­களில் உள்ள மைய­வா­டி­களில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டன. இதன் போது பெரும் திர­ளான மக்கள் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இந்த நிலையில் நேற்று வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணைகள் தொடர்பில் தெஹி­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் பிரதீப் நிஸாந்த கேச­ரி­யிடம் குறிப்­பி­டு­கையில்
'இதுவரை­யி­லான விசா­ர­ணை­களில் இந்த மர­ணங்­க­ளா­னது நச்சு வாயுவை சுவா­சித்­ததன் ஊடாக ஏற்­பட்­டுள்­ளது என்­ப­தையே எம்மால் அனு­மா­னிக்க முடி­கி­றது. வீட்டின் குறிப்­பிட்ட பகு­தியில் மட்டும் ஏற்­பட்ட தீயினால் , சீல் செய்­யப்­பட்ட வீடு முழு­வதும் பர­விய புகை மற்றும் பதார்த்­தங்­களால் உரு­வான விஷ வாயுவை தூக்­கத்தில் இருந்த அவர்கள் சுவா­சித்­துள்­ளனர். அதில் இருந்து தப்பிக்கவும் அவர்கள் பிரயத்தனம் எடுத்துள்ளனர். 

எனினும் அவை சாத்தியமாகவில்லை என தோன்றுகிறது. எவ்வாறாயினும் தீ பரவிய விதம், அதற்கான காரணம் ஆகியவற்றை உறுதிப்படுத்த அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையை நாம் எதிர்ப்பார்க்கின்றோம். அதுவரை எதனையும் உறுதியாக கூற முடியாது.' என்றார்.
« PREV
NEXT »

No comments