Latest News

February 24, 2016

சம்பந்தமில்லாத இடங்களில் விகாரைகள் அமைப்பதை தடுப்பதற்கு சட்டம் வேண்டும்
by admin - 0

வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு தொடர்­பா­கவும் மனித உரி­மைகள், காணி தொடர்­பாக நீதி வழங்க பிராந்­திய நீதி­மன்­றங்கள் அமைக்­கப்­பட வேண்டும். மற்றும் பெரும்­பான்மை இன­மாக வாழும் பௌத்த சிங்­கள மக்கள் தம்­முடன் சம்­பந்­த­மில்­லாத இடங்­களில் விகா­ரைகள் அமைப்­பதை தடுப்­ப­தற்­கான கடும் சட்­டங்கள் உரு­வாக்­கப்­பட வேண்டும் என பொது­மக்கள் யோச­னை­களை தெரி­வித்­தனர்.

அர­சியல் யாப்பு சீர்தி­ருத்­தங்கள் மீதான பொது­மக்கள் யோச­னைகள் முன்வைக்கும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திற்­கான நிகழ்வு நேற்றுக் காலை திரு­மலை மாவட்டச் செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்­வுக்­கான குழு­வுக்கு வின்ஸ்டன் பதி­ராஜா தலைமை தாங்­கி­ய­துடன் எஸ்.சீ.சீ.இளங் ­கோவன், ஏ.தவ­ராஜா, என்.செல்­வக்­கு­மாரன் ஆகி யோர் கலந்துகொண்­டி­ருந்­தனர்.
இதன்போது மக்கள் யோச­னை­களை தெரி­வித்­தனர். வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு தொடர்­பா­கவும் மனித உரி­மைகள், காணி தொடர்­பாக நீதி வழங்க பிராந்­திய நீதிமன்­றங்கள் அமைக்கப்­பட வேண்டும். பெரும்­பான்மை இன­மாக வாழும் பௌத்த சிங்­கள மக்கள் தம்­முடன் சம்­பந்­த­மில்­லாத இடங்­களில் விகா­ரைகள் அமைப்­பதை தடுப்­ப­தற்­கான கடும் சட்­டங்கள் உரு­வாக்­கப்­பட வேண்டும்.

நிலம் மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்கள் தொடர்­பாக வெளிப்­படைத் தன்மை பேணப்­ப­டு­வதாக இருக்க வேண்டும். 12 ஆணைக்­கு­ழுக்கள் சுயா­தீ­ன­மாக செயற்­பட வேண்டும்.

ஒரு இனத்­திற்கு குறிப்­பிட்ட தீமையை ஏற்­ப­டுத்­தாத வண்ணம் சட்­டங்கள் உரு­வாக்­கப்­பட வேண்டும். தொகுதி மற்றும் தொகு­தியை 50 க்கு 50 வீதம் என்ற அடிப்­ப­டையில் தேர்தல் சட்டம் உரு­வாக்­கப்­பட வேண்டும். தேர்­தல்­களில் வேட்­பா­ளர்­க­ளாக பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை அர­சியல் சட்­ட­மாக்க வேண்டும். மாகாண மட்­டத்தில் ஒம்­புட்ஸ்மேன் நிய­மிக்­கப்­படல் வேண்டும் போன்ற கருத்­துக்­களை தெரி­வித்­தனர். அர­சியல் கட்­சி­களின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தன் னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டு தமது யோசனைகளை முன்வைத்தனர்
« PREV
NEXT »

No comments