Latest News

February 24, 2016

முன்னாள் போராளிகளுக்கான கொடுப்­ப­னவை அதி­க­ரித்தால் கடுமையான எதிர்ப்பு வெளியிடுவோம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில
by admin - 0

விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் முன் னாள் உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்கப்படும் கொடுப்­ப­னவை 6000 ரூபாவாக ­அ­தி­க­ரிக்க வேண்டும் என்ற வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனின் பரிந்­து­ரைக்கு அர­சாங்கம் இணக்கம் தெரி­விக்க முற்­பட்டால் அர­சாங்­கத்தை கடு­மை­யாக எதிர்ப்­போ­ம் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பிவி­துரு ஹெல உறு­ம­யவின் தலை­வ­ரு­மான உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.
பிவி­துரு ஹெல உறு­ம­யவின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில்,

1980 களில் ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ராக வேலை நிறுத்த போராட்­டங்­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு கடந்த மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தில் 5000 ரூபா மாதாந்த கொடுப்­ப­னவு வழங்­கப்­பட்­டது. அந்த கொடுப்­ப­ன­வையும் நிறுத்த தற்­போது நல்­லாட்சி அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை வேலை நிறுத்தத்தில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு வழங்­கப் ­பட்டு வந்த 5000 ரூபாய் கொடுப்­ப­னவு 6000ஆக அதி­க­ரிக்­கப்­பட்­ட­துடன் பணத்­திற்கு உரிய நபர் இறக்கும் பட்­சத்தில் அது அவ­ரது மனை­விக்கு வழங்­கப்­பட வேண்டும் என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

தற்­போது நல்­லாட்சி அர­சாங்கம் 1980 க ளில் ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ராக வேலை நிறுத்த போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட 5000 ரூபாய் மாதாந்த கொடுப்­ப­ன­வுக்கு மாறாக 2இலட்­சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மொத்­த­மாக செலுத்­தி­விட்டு அதன் பின்பு பணம் பெற்­ற­வர்கள் அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து எந்த தொகை­யையும் எதிர்­பார்க்க மாட் டோம் என்று குறிப்­பி­டப்பட்ட ஆவ­ணத் தில் கையெ­ழுத்­திட வேண்டும் என்றும் கூறி யுள்ளது.
36 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இடம்­பெற்ற ஜூலை வேலை நிறுத்­தத்திற்­காக தற்­போதும் ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம் பழி­வாங்க முற்­ப­டு­வது நியா­ய­மற்­றது. இது இவ்­வா­றி­ருக்க வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் முன்னாள் போரா­ளி­க­ளுக்கு வழங்­கப்­படும் 3000 ரூபாய் கொடுப்­ப­னவை 6000 ஆக அதி­க­ரித்து மாதாந்தம் வழங்க வேண்டும் என்று அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

அது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து விரைவில் தீர்வை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. அவ்­வாறு செய்ய முற் ­பட்டால் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக கடு­மை­யான எதிர்ப்பை வெ ளியிடுவோம். அதேபோல் 30 வருடம் யுத்தம் செய்து நாட்டை பிளவு படுத்­து­வதை பார்க்­கிலும் வேலை நிறுத்தம் செய்­வது மிகப்­பெ­ரிய குற்­றமா என்ற கேள்­வியை அர­சாங்­கத்­திடம் வின­வு­கின்றோம்.

அர­சாங்கம் ஏன் இவ்­வாறு அமா­னு ஷ்ய தீர்­மானம் ஒன்றை எடுத்­தது என்­பது எமக்கு மட்­டு­மல்­லாது மக்­க­ளுக்கும் கேள்­விக்­கு­றி­யா­கவே உள்ளது. அதனால் மக்கள் முன்னிலையில் அரசாங்க தரப்பு குறித்த காரணங்கள் தொடர்பில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும். வரலாற்றி லிருந்து இந் நாடு பிளவுபடுவதற்கு இட மளிக்காது பாதுகாத்து வந்த தேரர்களை தண்டிக்கும் அரசாங்கம் யுத்தம் செய்தவர் களை ஆதரிப்பதும் கேள்விக்குரியதாகவே உள்ளது. என்றார்.
« PREV
NEXT »

No comments