Latest News

February 22, 2016

லண்டனில் உள்ள தமிழர்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது- ஜூன் 23 தெரியும் ?
by admin - 0

தற்போது லண்டனில் ஏற்பட்டுள்ள சிக்கல் என்னவென்றால், லட்சக்கணக்கான , ஐரோப்பியர்கள் இங்கே வந்து குடியேறுவது தான். இதனால் லண்டனே ஆட்டம் கண்டுள்ளது. ஐரோப்பியர்கள் லண்டன் வந்து இங்குள்ள அனைத்து வழங்களையும் பாவிக்க ஆரம்பித்துள்ளதால். பிரித்தானிய மக்களுக்கு பெரும் இடைஞ்சல்கள் ஏற்பட்டுள்ளது. இன் நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள கான்சர்வேட்டிவ் கட்சியில் உள்ளவர்களே, டேவிட் கமரூனுக்கு எதிராக போர் கொடி உயர்த்த ஆரம்பித்துள்ளார்கள். இதனை சற்றும் எதிர்பார்க்காத டேவிட் கமரூன் , வேறு வழி இன்றி ஜூன் 23 தேர்தலை அறிவித்துள்ளார்.

ஜூன் 23 அன்று நாடு தழுவிய ரீதியில் , பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்து இருப்பதா ? இல்லை விலகிச் செல்வதாக என்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பிரித்தானிய மக்கள் விலகிச் செல்வது என்று , பெருவாரியாக வாக்களிக்க வாய்ப்புகள் உள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. அப்படி ஒரு நிலை உருவாகுமேயானால். பிரான்ஸ் ஜேர்மனி , மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து லண்டன் வந்து வாழ்ந்து வரும் தமிழர்கள் மீண்டும் தமது சொந்த நாடுகளுக்கு செல்ல நேரிடலாம் என்ற அச்சமும் தோன்றியுள்ளது.

எனவே லண்டனில் தொடர்ந்து தங்கியிருக்க விரும்பும் தமிழர்கள், தாங்கள் வைத்திருக்கும் பாஸ்போட்டை பிரித்தானிய பாஸ்போட்டாக மாற்ற முடியுமா என்று அறிந்து கொள்வது நல்லது. முடியும் என்றால் பிராஜா உரிமையை இப்பொதே பெற்றுக்கொள்வது நல்லது என்றும் கூறப்படுகிறது


« PREV
NEXT »

No comments