Latest News

February 22, 2016

சிறந்தவராக தெரிந்தால் மட்டும் வாக்களியுங்கள்.. நாம் தமிழர் வேட்பாளரின் நாகரீக ஓட்டுவேட்டை!
by admin - 0

கோவை: நாம் தமிழர் கட்சியின் சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மு.சரளா தேவி தனது பிரசாரத்தை முகநூலில் தொடங்கியுள்ளார். 


அதுவும் மிகவும் நாகரீகமாக, அட்டகாசமாக.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. சொன்னதோடு நில்லாமல் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது அக்கட்சி.
கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இக்கட்சியின் வால்பாறை வேட்பாளர் மு. சரளாதேவியின் சுய அறிமுகத் தகவலை பேஸ்புக்கில் பார்க்க நேரிட்டது. பார்த்ததும் கண்ணைக் கவர்ந்தது.


மு. சரளா தேவியின் சுய அறிமுகம் இதுதான்.. தாய்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் ....... எனது பெயர் பேராசிரியர்.கவிஞர் மு.சரளா தேவி நான் B.Sc,B.A,M.A,M.Phil,PhD படித்துள்ளேன், பேராசிரியராக பணியாற்றுகிறேன் ...... நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தை சார்ந்தவள். நான் வரும் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகிறேன்.... படிப்பு, அறிவு, ஒழுக்கம், சமூக அக்கறை, தமிழ் தேசியம், சாதிமத புறக்கணிப்பு, ஊழல் ஒழிப்பு, போன்ற விடயங்களில், வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மற்ற கட்சி வேட்பாளர்களையும், நாம்தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் பேராசிரியர்.கவிஞர். மு.சரளா தேவி ஆகிய என்னையும் ஒப்பிட்டு பாருங்கள், நான் சிறந்தவாளாக இருந்தால் மட்டும் எனக்கு வாக்களியுங்கள் ...

 நன்றி... 

நாம்தமிழர் கட்சி வால்பாறை சட்டமன்ற தொகுதி...... இது மற்றொரு அரசியல் கட்சி அல்ல, மாற்று அரசியல் புரட்சி ........ நமது வாக்கு.. நம்மை ஆளவா... நமது வாக்கு.. நாமே ஆளவா... சிந்திப்போம்.....!


« PREV
NEXT »

No comments