Latest News

February 22, 2016

விக்ரமின் உண்மை முகம்
by admin - 0

விருது விழாவுக்கு வந்த விக்ரமை பார்த்து ரசிகர் வந்தபோது விக்ரம் செய்ததை பாருங்கள். விக்ரமின் உண்மை முகம் இது தானா ஒரு ரசிகன் குறிப்பாக இவர் ஈழத் தமிழர் என சில இந்திய ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன ஆனால் முழுமையாக உறுதிப் படுத்த முடியவில்லை.

ரசிகர்களை படம் பார்ப்பதற்காக வைத்திருக்கும் நடிகர்கள் மத்தியில் விக்ரமின் செயற்பாடு என்ன சொல்கிறது…

சமீபத்தில் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற தனியார் டிவி சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ரசிகர் ஒருவரிடம் விக்ரம் நடந்துகொண்ட பணிவு, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
அதாவது, விழா மேடைக்கு கீழே அமர்ந்திருந்த விக்ரமை காண ரசிகர் ஒருவர் பாய்ந்தோடி வந்து, விக்ரமை கட்டித்தழுவி அவரை அரவணைத்துக் கொண்டார். ரசிகரின் இந்த செயலை விக்ரம் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும், அருகிலிருந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகரை விக்ரமிடம் இருந்து பிரித்து, அவரை ஆவேசத்துடன் கீழே தள்ளிவிட்டனர்.
ஆனால், உடனே விக்ரம் எழுந்துவந்து அந்த ரசிகரை ஏதும் செய்யாதீர்கள் என்று பாதுகாவலர்களை விலக்கிவிட்டு, அவரை தன்னுடன் அழைத்து அவர் விருப்பத்தை கேட்டார். ரசிகரும், விக்ரமுடன் போட்டோ எடுத்துக் கொள்ளவேண்டும் என்று தனது ஆசையை அவரிடம் கூற, விக்ரமும் அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள செல்போனை முன்னோக்கி எடுத்தார்.
ஆனால், செல்பி வேண்டாம் என்று ரசிகர் சைகை செய்ய, அருகிலிருந்தவரிடம் செல்போனை கொடுத்து விக்ரமை கட்டியணைத்தவாறு அந்த ரசிகர் போட்டோ எடுத்துக்கொண்டார். பின்னர் அந்த ரசிகர் விக்ரமை கட்டிப்பிடித்து அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இது எல்லாவற்றையும் விக்ரம் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். அந்த ரசிகர் ஒரு மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சத்துக்கு சென்றாலும் ஒரு ரசிகனின் சின்ன ஆசையை நிறைவேற்றிய விக்ரமை அந்த விழாவுக்கு வந்திருந்த அனைவரும் கரகோசம் எழுப்பி மனதார பாரட்டினார்கள். விக்ரமின் இந்த பணிவுதான் அவரை இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்து நிற்க வைத்துள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
« PREV
NEXT »

No comments