Latest News

January 03, 2016

பரந்தன் சிவபுரம் வீதி 5 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளதாக சிலரால் பொய்ப்பரப்புரை செய்யப்பட்டு அக்கிராமத்திற்கான அபிவிருத்தியைத் தடுக்க சதி!
by admin - 0

பரந்தன் சிவபுரம்
பரந்தன் சிவபுரம் வீதி 5 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளதாக சிலரால் பொய்ப்பரப்புரை செய்யப்பட்டு அக்கிராமத்திற்கான அபிவிருத்தியைத் தடுக்க சதி!

பரந்தன் சிவபுரம் கிராமம் ஒரு மாவீரர் கிராமம் என்பதால் கடந்த கால மகிந்த கூட்டத்தினரால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது.
இக்கிராமத்திற்கான அபிவிருத்தித் திட்டங்கள் எதுவுமே இதுவரை வழங்கப்படவில்லை இக்கிராமத்து மக்கள் போக்கு வரத்துச் செய்யும் வீதிகளில் ஒன்று கூட  இதுவரை திருத்தியமைக்கப்படாத நிலையில் இக்கிராம மக்கள் போக்குவரத்துச் செய்வதிலும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். 

சிவபுரம் கிராமத்தில் 350 இற்கம் அதிகமான குடும்பங்கள் தகரம் தரப்பாட்களால் அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகைகளில் 6 வருடத்திற்கும் மேலாக அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள். 

இந்நிலையில் சிவபுரம் கிராமத்தினது அபிவிருத்திகள் அனைத்துமே துர்நோக்கம் கருதித் தடுக்கப்பட்டுள்ளன, சிவபுரம் கிராமத்து மக்களுக்கு மூன்று தடவைகள் இந்திய அரசின் வீட்டுத் திட்டம் வழங்கவென வந்தபோதிலும் காணிப் பிரச்சனை எனக் காரணங்கூறி அம்மக்களுக்கு வழங்கவிடாது தடுக்கப்பட்டன.

இப்படியான நிலையில் கரைச்சிப் பிரதேச சபையால் முல்லை வீதியின் 10 ஆம் ஒழுங்கையை சிவபுரம் பாடசாலைவரை 500 மீற்றர் தூரத்தைத் திருத்தியமைப்பதற்காகவென ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பரந்தன் கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர் 10 ஆம் ஒழுங்கையைத் திருத்தியமைக்க விடாது தடுத்து நிறுத்தி தனது வீடு அமைந்துள்ள 11 ஆம் ஒழுங்கையின் கொங்கிறீற் போடப்பட்ட பகுதியின் மீதிப்பகுதியைத் திருத்தியமைக்குமாறு கூறியதற்கமைவாக அவரது வீட்டுக்குப் போக்குவரத்துச் செய்யும் 11 ஆம் ஒழுங்கையின் ஒரு பகுதியான 500 மீற்றர் வரையான பகுதி மட்டுமே திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்பதுடன் சிவபுரம் கிராமத்திற்கான வீதி ஐந்து மில்லியன் ரூபா செலவில் திருத்தியமைக்கப்பட்டுள்ளது, சிவபுரம் கிராம மக்கள் இப்போது சிரமமின்றிப் போக்கு வரத்துச் செய்கின்றார்கள் சிவபுரம் கிராமத்திற்கு வீதி திருத்துவதற்காக இனி நிதி எதுவும் ஒதுக்கத் தேவையில்லை என 11 ஆம் ஒழுங்கையின் முன் பகுதியான சீமெந்து கொங்கிறீற் போடப்பட்டுத் திருத்தியமைக்கப்பட்ட பகுதியைக் காட்டி சிவபுரம் கிராமத்திற்கான வீதி திருத்தியமைப்பதற்கான அம்மக்களின் கோரிக்கையை பொய்யெனக் கூறி சிலர் பொய்ப் பரப்புரை செய்து வருகின்றார்கள்.

வடக்கு மாகாண சபை ஆட்சிக்கு வந்து நீண்ட காலமாகின்றபோதிலும் சிவபுரம் கிராமத்தில் மாவீரர் போராளி குடும்பங்கள் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில்  அவலப்படுகின்றார்கள் என்பதை வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் அறிந்திருந்தும் இக்கிராமத்திற்கு எவ்விதமான அபிவிருத்தியையும் இதுவரை வழங்காமல் கண்டும் காணாதமாதிரி இருந்து வருகின்றார்கள்.

இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழினி அவர்களின் மரண நிகழ்வுகள் சிவபுரத்திலுள்ள அவரது வீட்டில் நடைபெற்ற போது வடக்கு மாகாண முதலமைச்சர் மேன்மைதங்கிய க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் சிவபுரம் கிராமத்திலுள்ள அவரது மரண வீட்டுக்குப் போவதைத் தவிர்த்து விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மூலம் தனது மரண (இரங்கல்) அறிக்கையை வழங்கி அங்கு வாசிக்குமாறு கூறியிருந்தமையிலிருந்தே சிவபுரம் கிராமத்திற்குச் செல்லக்கூடாது சென்றால் இக்கிராமத்து நிலையை நேரில் காணவேண்டி வரும் அப்படிக் கண்டால் அக்கிராம மக்கள் தன்னிடம் கிராம அபிவிருத்தி பற்றிக் கேட்பார்கள் என்பதாலும் மரண வீட்டிற்கு வந்தவர்கள் வடமாகாணத்தில் கிளிநொச்சியில் இப்படியானதொரு மாவீரர் கிராமம் புறக்கணிக்கப்பட்டு வருகின்றதே என கேட்பார்கள் என்பதனாலுமே செல்லவில்லை என்பது வெளிப்படுவதாக கூறப்படுகின்றது. 

சிவபுரம் கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பில் அக்கிராமத்து மக்களுடன் கதைக்கக்கூட இதுவரைக்கும் இக்கிராமத்தைக் கடந்து கொழும்புக்கும் முல்லைத்தீவுக்கும் செல்லும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட எவருமே செல்லவில்லை என்பதை இக்கிரமத்து நிலையிலிருந்து அறிய முடிகின்றது. 

சிவபுரம் கிராம மக்கள் தமது கிராமத்தின் அபிவிருத்தி பற்றிக் கதைப்பதற்காக, மக்களை ஒழுங்கமைப்பதற்காக சிவபுரம் கிராமத்திற்கான கிராம அபிவிருத்திச் சங்கம் ஒன்றினை அமைப்பதற்கு கண்டாவழைப் பிரதேச செயலாளர் உட்பட்டவர்களிடம் கோரியிருந்த போதும் இதுவரை சிவபுரம் கிராமத்திற்கான கிராம அபிவிருத்திச் சங்கம் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை மகிந்த அரசாங்க காலத்தில் சிவபுரம் கிராமம் மாவீரர் கிராமம் அங்கிருப்பவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் குடியமர்த்தப்பட்டவர்கள் அவர்களை கிராம அபிவிருத்திச் சங்கமாகச் செயற்படவிட்டால் புலிகளின் ஆக்களுக்கே அமைப்புக்களை வழங்குவாதாக அமையும் என்பதால் மகிந்தவின் விசுவாசிகளால் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது தற்போது தேர்தல்களின் போது வட்டார முறை வருவதனால் சிவபுரம் கிராமத்தை தனியான கிராம மாக்கி  அக்கிராமத்திற்கு தனியான கிராம அபிவிருத்திச் சங்கத்தை வழங்கினால் அரசியல்வாதிகளின் வட்டார முறை தேர்தல் அரசியலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதனால் சிவபுரம் கிராமத்திற்கு என்றொரு தனியான கிராம அபிவிருத்திச் சங்கத்தை வழங்கக்கூடாது என்ற அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் மக்களால் கூறப்படுகின்றது. 

எது எப்படியிருந்தாலும் தமிழரசு என்று கூறப்படும் அரசு வடக்கு மாகாணத்தில் ஆட்சியிலுள்ளது. அவர்களிடம் கிராமங்களை அபிவிருத்தி செய்கின்ற அதிகாரம்மிக்க அமைச்சு காணப்படுகின்றது. இந்நிலையில் 350 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட பரந்தன் சிவபுரம் கிராமத்திற்கான ஒரு கிராம அபிவிருத்திச் சங்கத்தை அமைப்பதற்குக்கூட வடக்கு மாகாண அரசு அனுமதிக்கவில்லை என்றால் இவர்களும் முன்னைநாள் சனாதிபதி மகிந்தராஜபக்ச மாதிரி புலிகள், புலிகளின் ஆட்கள் என்று அக்கிராமத்தைப் புறக்கணிப்பது வெளிப்படுகின்றதல்லவா
« PREV
NEXT »

No comments