Latest News

January 03, 2016

இலங்கையின் கல்வி அமைச்சால் புறக்கணித்து ஒதுக்கப்பட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கு இந்த ஆண்டிலாவது விடிவு கிடைக்குமா???
by admin - 0

இலங்கையின் கல்வி அமைச்சால் புறக்கணித்து ஒதுக்கப்பட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கு இந்த ஆண்டிலாவது விடிவு கிடைக்குமா???

இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணங்களுக்கு முற்றிலும் முரணான வகையில் அரசியல்வாதிகளின் அரசியல் சுயநல நோக்கங்களுக்காக மலையகம் உட்பட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்களுக்கு ஆசியரிய உதவியாளர்கள் என்னும் நியமனம் வழங்கி அவர்களுக்கு மாதச் சம்பளமாக வெறும் 6000 ரூபா மட்டுமே வழங்கப்பட்டுவருகின்றது. 
இதேநேரம் சிங்களவர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணங்களுக்கு அமைவாக ஆசிரியர்  நியமனம் தரம்-3-11 இல் வழங்கப்பட்டுள்ளது, வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஆசிரிய உதவியாளர் என்னும் நியமனத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தமக்காக சம்பளத்தை அதிகரித்து தம்மையும் சட்டப்படி இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்குமாறு கோரிவருகின்றார்கள்.

கடந்த கால மகிந்த ஆரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டது போன்ற நிலையேதான் தற்போதைய மைத்திரி நல்லாட்சியிலும் தமது விடயத்தில் காணப்படுவதாகவும் தமிழ் ஆமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட தமது நிலையைக் கருத்திலெடுத்து தமது பிரச்சனைக்குத் தீர்வுகாண முயலவில்லை என்று பாதிக்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்கள் கூறிக்கவலை தெரிவிக்கின்றார்கள்.

குடும்பப் பொறுப்புள்ளவர்களாகக் காணப்படும் ஆசிரிய உதவியாளர்களுக்கு மாதச் சம்பளமாக 6000 ரூபா மட்டும் வழங்கப்படுகின்றமையால் ஆசிரிய உதவியாளர்களது குடும்பங்கள் பசிபட்டினியோடு வாழ்வதாகக் கூறப்படுவதுடன் இவ்விடயத்தைப் பொறுப்பாகவுள்ள அமைச்சர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்ட போதும் அவர்கள் இவ்விடயம் பற்றிக் கருத்தில் எடுக்காமல் நீங்கள் விரும்பினால் 6000 ரூபாவுடன் வேலையைச் செய்யுங்கள் விருப்பமில்லையென்றால் விட்டிட்டுப் போய் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யுங்கள் வேறு வேலை செய்யுங்கள் என்று நக்கலாகக் கூறி வருவதாக பாதிக்கப்பட்டவர்களால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடங்களில்தான் தமது சம்பள உயர்வு தொடர்பான கோரிக்கைகளைக் கருத்தில் எடுக்காமல் தம்மைப் புறக்கணித்து ஒதுக்கிய நல்லாட்சிக்கான இந்த மைத்திரி அரசாங்கம் இந்தப் புதிய ஆண்டிலென்றாலும் மனம் மாறி தமது துன்பியல் நிலையைக் கருத்தில்கொண்டு தமது வாழ்வியலுக்கான தமது உழைப்புக்கேற்ற ஊதியத்தை ஏனைய அரச ஊழியர்களுக்கு வழங்குவது போல வழங்க முன் வரவேண்டும் எனவும் தங்களையும் மனிதர்களாகக் கருத்தில்க்கொண்டு இவ்வளவு காலமாக தமது உழைப்புக்காண சம்பளத்தை சம்பள நிலுவைக் கொடுப்பனவாக வழங்கி உதவவேண்டும் எனப் பாதிக்கப்பட்ட ஆசிரிய உதவியாளர்கள் கவலையோடு கோரிநிக்கிறார்கள்.

தமழிர்களாகவுள்ள அமைச்சர்களுக்கு தமது வாழ்வியல் துன்பியல் நிலை நன்கு தெரிந்த நிலையிலும் தமது சம்பள உயர்வு பற்றியோ தமது உழைப்புச் சுறண்டப்படுவது பற்றியோ அவர்கள் மௌனமாக இருந்து வருகின்றார்கள் தமது பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும் தீர்த்து வைக்க வேண்டும் என்ற எந்த முயற்சியும் எடுக்காமல் கண்மூடியிருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களால் கவலை தெரிவிக்கப்படுகின்றது



« PREV
NEXT »

No comments