Latest News

January 27, 2016

நான் இல்லை எனில் யுத்தம் இன்னும் நடந்து கொண்டிருக்கும்: கோத்தபாய
by admin - 0

ஐம்பத்து எட்டு இலட்சம் மக்களின் அபிலாஷைகளின் பிரகாரம் புதிய கட்சியை உருவாக்க சிறந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி அபயராம விஹாரையில் இடம்பெற்ற முறுத்தெட்டுவே ஆனந்த தேரரின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தானம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றிருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு கருத்து தெரிவித்துள்ள அவர், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள இரா.சம்பந்தன் இந்த அரசாங்கம் அமைய ஒத்துழைப்பு வழங்கியவர் என்பதால் அவரிடம் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்தும் மக்களின் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது.

இதனால் புதிய கட்சி ஒன்றை உருவாக்குவதும் அதன் வாயிலாக புதிய தலைமைத்துவத்தையும் கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் தேவை.
அதேபோல் நான் இல்லை எனில் யுத்தம் இன்னும் நடந்து கொண்டிருக்கும். எனக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments