Latest News

January 29, 2016

மகிந்தவுக்கான ஆதரவு அதிகரிப்பு-மைத்திரியின் தலைவர் பதவி விரைவில் பறிபோகலாம்?
by admin - 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெறவிருந்த ஊடக சந்திப்பொன்று கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்காக நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் கட்சியின் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.


கலந்துரையாடலின் முடிவில் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் அனைவரும் தாங்கள் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிரிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கும் வகையில் ஊடக சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் வந்திருந்தவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு வீதமான உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மைத்திரிக்கு எதிராக கலகக்குரல் எழுப்பி, கடுமையாக விமர்சித்துள்ளனர்.

அத்துடன் வெளிப்படையாக மஹிந்தவுக்கான ஆதரவையும் தெரிவித்துள்ளனர். இது கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த மைத்திரி தரப்பு கம்பஹா அரசியல்வாதிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதன் காரணமாக நேற்றைய ஊடக சந்திப்பு ரத்து செய்யப்பட்டதுடன், சந்திரிக்கா,மஹிந்த, மைத்திரி இணைந்து தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கவுள்ளதாக இன்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் கிராமிய மட்டங்களில் மாத்திரமன்றி, நகர்ப்புறங்களிலும் செல்வாக்கிழந்து வரும் ஜனாதிபதி மைத்திரியிடம் இருந்து சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் விரைவில் பறிபோகலாம் என்று அரசியல் அவதானிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
« PREV
NEXT »

No comments