Latest News

December 16, 2015

ஆஸ்திரேலியாவின் பழங்குடிகள் தமிழர்கள்
by admin - 0

ஆங்கிலேயர் குடியேறுவதற்கு முன்பே, ஆஸ்திரேலியாவில் தமிழர் குடியேறினர் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. நியூசிலாந்து பழங்குடிகளான மவோரி மக்கள் மத்தியில் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு வெங்கல மணியை ஆங்கிலேயர் கண்டெடுத்தனர்.

அதை அங்குள்ள அரும்பொருட்காட்சிக் கூடத்தில் வைத்துள்ளனர். அம்மணியின் மீதுள்ள வாசகம், 15-ஆம் நூற்றாண்டுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அது பின் வருமாறு : “முகையதீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி” என்று காணப்படுகிறது. இதன் மூலம் தமிழக வணிகர்கள் எந்தளவிற்கு தூரக்கிழக்கு நாடுகளுக்கு போய்வந்தனர் என்பதை அறியலாம்.

தமிழர்-ஆஸ்திரேலிய பழங்குடியினர் பற்றிய ஆய்வுகள்:

பண்டைய திராவிட இன மக்களின் மொழி, இன கலாச்சார ஒற்றுமைகள் இங்குள்ள பழங்குடி களிடம் காணப்படுகின்றன. ஏ.சேப்பல் என்பவர் பின்வருமாறு கூறுகின்றார்: “டிராலுக்மிலா சபோனஸ்கோவா பழங்குடி பேச்சில் ஏராளமான தமிழ்ச்சொற்களைக் காணலாம். இவர்கள் வாழும் இடங்கள் நல்லாபார் சமவெளி, மேற்கு ஆஸ்திரேலியப் பகுதிகள் ஆகியனவாகும்.

சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உண்டு. “ஒரு காலத்தில் குமரிக்கண்ட அழிவில் சம்பந்தப்பட்ட பெருங்கண்டத்தில் சரிந்து, இவர்கள் கீழே தெற்கில் ஒதுங்கிப் போயிருக்கலாம்”. மேலும் ஜெ.சி. ரிச்சர்டு என்ற ஆய்வாளர் ‘தமிழுக்கும் பழங்குடி மக்களுக்கும் ஒற்றுமையுண்டு’ என்கிறார். திராவிடமொழிகளுக்கும் பழங்குடியினர் மொழிகளுக்கும் ஒரே இலக்கண அமைப்பு காணப்படுவதாக வில்லியம் பிலிக் என்பவர் குறிப்பிடுகிறார்.

ஆஸ்திரேலியா சென்று வந்த பத்மா சுப்ரமணியம், பின்வருமாறு குறிப்பிடுகிறார்: மெர்ல்போனில் பக்லோவியர் என்னும் பழங்குடி மக்களின் பேச்சில் பல தமிழ்ச் சொற்கள் உள்ளன. முட்டி(முழங்கால்), ஏர்ரது (ஏறுகிறது), மின்னல், பாம்பு, மகவு, நீறு போன்ற தமிழ்ச் சொற்களை இவர்கள் பயன்படுத்துகின்றனர் என்கிறார்.

தொல்காப்பியம் குறிப்பிடும் நீர்நாயையும், காரன்னத்தையும் ஆஸ்திரேலியாவில்தான் பார்க்க முடிகிறது. இந்தியாவில் மற்ற இனமக்களைவிட தமிழர்களிடமே ‘வளைதடி’ என்கிற ‘வளரி’ பயன்பாட்டில் இருந்தது.

இக்கருவியை ஒரு பொருளின் மீதோ, அல்லது ஆள், பறவை, விலங்கு மீது குறிவைத்து எறிந்தால் அப்பொருளைத் தாக்கி விட்டு மீண்டும் எய்தவரிடமே வரும். தமிழகத்தை கடைசியாக ஆண்ட சிவகங்கைபாளையக்காரர்களான சின்ன மருது, பெரியமருது இக்கருவியை பயன்படுத்தியதை ஜென்ரல் வெல்ஷ் தம் இராணுவ நினைவுக் குறிப்பில் குறித்துள்ளார். ‘மருது பாண்டியர்’ கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட பின்னர், இக்கருவியைப் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டமும் வந்தது.

இன்றும் கூட முக்குலத்தோர் வீடுகளில் இக்கருவி பூசைப் பொருளாக காணப்படுகிறது என்கிறார் தென்னிந்திய பழங்குடி ஆய்வாளரான எட்கர் தர்ஸ்டன். இக்கருவி ‘பூமராங்’ என்கிற பெயரில் இன்றும் ஆஸ்திரேலிய பழங்குடிகளிடம் பயன்பாட்டில் உள்ளதை வைத்தே பண்டைய உறவை, பண்பாட்டை உணர முடிகிறது.

‘ஆஸ்திரேலிய தமிழ்’ நூலை வெளியிட்டு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பொறுப்பு அலுவலர் ராமசாமி பேசியதாவது:

தமிழர்கள் 90 நாடுகளில் இருப்பதாகச் சொல்கின்றனர். கந்தையா கள ஆய்வு மேற்கொண்டதால், ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

நாம் உலகெங்கும் உள்ள தமிழர்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள் கந்தையாவின் ஆஸ்திரேலியத் தமிழர்கள் பற்றிய நூல்களில் உள்ளன.

ஆஸ்திரேலியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களின் மொழியில் தமிழ் மொழிச் சொற்கள் கலந்துள்ளன. ஆஸ்திரேலியப் பழங்குடியின மக்களின் மொழி குறித்து ஆய்வு மேற்கொண்டால், தமிழுக்கும் – உலக மொழிகளுக்கும் உள்ள உறவு குறித்து அறியமுடியும். இவ்வாறு ராமசாமி பேசினார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பழங்குடியின் புகைப்படம். இதை உங்கள் வீட்டில் காட்டினால் யாருடைய தாத்தா என்றுதான் கேள்வி வரும்.
« PREV
NEXT »

No comments