வடமாகாண சபையை பொறுப்பேற்றபோது காணப்பட்ட மக்களின் அவல நிலை இன்றும் தொடர்வதாக மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் இன்று தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றியபோதே முதலமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
வடமாகாண சபையின் 41 ஆவது அமர்வு அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று முற்பகல் கூடியது.
இதன்போது அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் அரசாங்கம் வடக்கு மாகாண சபையின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தினார்.
No comments
Post a Comment