Latest News

December 16, 2015

அக்கராயன் வீதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதால் மக்கள் அச்சத்தில்
by admin - 0

கிளிநொச்சி மாவட்டத்தின் முறுகண்டி – அக்கராயன்குளம் பகுதியின் பிரதான வீதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதால் அப்பகுதியிலுள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

குறித்த வீதியில் இராணுவத்தினர் அணிவகுப்பு மற்றும் இதர பயிற்சிகளில் ஈடுபடும் நடவடிக்கையை புதிதாக ஆரம்பித்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த வீதியைப் பயன்படுத்திவரும் பொன்னகர், அமைதிபுரம் ஆகிய கிராம மக்கள் இராணுவப் பயிற்சிகள் இடம்பெறும் நேரங்களில் அவ்வீதியூடாக பயணிப்பதற்கு அச்சம் கொண்டிருப்பதாக மக்கள் விசனம்…

கிளிநொச்சி மாவட்டம் உட்பட வடமாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை இராணுவம் கபளீகரம் செய்திருப்பதாகவும், தனியார் காணிகளில் இராணுவம் முகாம்களை இட்டு பொதுமக்களுக்கு இடறளை ஏற்படுத்தியிருப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அண்மையில் நாடாளுமன்றில் வைத்து விளங்கப்படுத்தினார்.

இராணுவத்தினரின் நடவடிக்கை காரணமாக வடபகுதி மக்களின் அன்றாட விவசாய, சுயதொழில் உள்ளிட்ட ஜீவநோபாய நடவடிக்கைகள் பாதிகக்ப்பட்டிருப்பதாகவும், இதனால் வடக்கிலுள்ள இராணுவத்தை அகற்றி வேறெங்காவது அமைத்துக்கொள்ளுமாறும் அவர் சபையில் வைத்து அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையிலேயே இராணுவப் படை முகாம்களில் பயிற்சிகளுக்கான காணிகள் இருக்கத்தக்க, பொதுமக்கள் பயன்படுத்தும் வீதிகளில் இராணுவத்தினர் பயிற்சிகளில் ஈடுபட்டுவருவது எவ்விதத்தில் நியாயம் என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றன


« PREV
NEXT »

No comments