Latest News

December 14, 2015

காணாமல் போனோரை விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் நட­வ­டிக்கை திருப்­தி­க­ர­மா­ன­தாக இல்லை
by admin - 0

காணாமல் போனோரை விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் நட­வ­டிக்கை திருப்­தி­க­ர­மா­ன­தாக இல்லை என மட்­டக்­க­ளப்பு தாயக மக்கள் மறு­மலர்ச்சி அமைப்பின் தலைவர் கலா­நிதி ஏ.செல்­வேந்­திரன் தெரி­வித்தார். நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். இது தொடர்­பாக அவர் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில்,

கடந்த அர­சாங்­கத்­தினால் இந்த காணாமல் போனோரை விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. ஆனால் அந்தக் குழுவின் செயற்­பாடுகள் திருப்­தி­யா­ன­தாக இல்லை.


மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லி­ருந்து மாத்­திரம் எமது மட்­டக்­க­ளப்பு தாயக மக்கள் மறு­மலர்ச்சி அமைப்பு காணாமல் போனோர் கடத்­தப்பட்டோர் தொடர்­பாக 2000க்கு மேற்­பட்­டோரின் விண்­ணப்­பங்­களை பெற்று காணாமல் போனோரை விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கு சமர்ப்­பித்­தி­ருந்­தது. ஆனால் அதில் 450 பேருக்கு மேற்­பட்­டோ­ரிடம் மாத்­தி­ரமே சாட்­சி­யங்­களை ஆணைக்­குழு பதிவு செய்­துள்­ளது.


ஏற்­க­னவே இந்த ஆணைக்­கு­ழு­வுக்கு விண்­ணப்­பித்த பலரும் ஆணைக்­குழு மட்­டக்­க­ளப்­புக்கு வந்த போது அவர்­க­ளி­டமும் விண்­ணப்­பித்­தனர். ஆனால் எது­வுமே நடக்­க­வில்லை.

காணாமல் போனோரை விசா­ரணை செய்யும் இந்த ஆணைக்­கு­ழுவின் செயற்­பாடு திருப்­தி­ய­ளிப்­ப­தாக இல்லை என்­றார்.
« PREV
NEXT »

No comments